S.K. சுரேஷ்பாபு.
உழவர் பெருந்தகை நாராயணசாமி நாயுடுவின் 41வது ஆண்டு நினைவு தினம். நாளை கோவை வையம்பாளையத்தில் உள்ள அவரது மணி மண்டபத்தில் புகழ் பறைசாற்றும் நிகழ்வு.. தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் பங்கேற்க நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி அறிக்கையின் வாயிலாக அழைப்பு..
தமிழக விவசாயிகள் சங்க நிறுவனரும், உழவர் பெருந்தகை என்று அனைத்து விவசாய பெருங்குடி மக்களாலும் போற்றப்படும், நாராயணசாமி நாயுடு அவர்களின் 41 ஆம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி உழவர் பெருந்தகை நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி அறிக்கையின் வாயிலாக அழைப்பு ஒன்றினை தமிழக விவசாயிகளுக்காக வெளியில் உள்ளார். அதில், தமிழக விவசாய பெருங்குடி மக்களுக்காக தமிழகத்தில் கடந்த 1970 முதல் 1980 கடுமையான வறட்சி நிலவியது, அப்போது தமிழக விவசாயிகள் வேளாண் பணிகளை தொடங்குவதற்கு நிதி கையிருப்பு இல்லாமல் தவித்தனர். பல சிரமங்களுக்கு இடையிலும் வேளாண் உற்பத்தியை பெருக்க வேண்டும் என்று பாடுபட்டுக் கொண்டிருந்த நிலையில், அப்போதைய தமிழ்நாடு அரசு மூலம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர் கடன் மற்றும் பண்ணை அபிவிருத்தி கடன் பெற்று, கிணற்று பாசனத்தை நம்பி விவசாயிகள் பயிர் செய்துவந்தனர்.
கிணறு பாசனத்தை நம்பி பயிர் செய்யும் விவசாயிகள், தமிழ்நாடு அரசு மின்சார வாரியம் மூலம், கிணற்று மோட்டாருக்கு மின் இணைப்பு பெற்று, பயிர் செய்தனர், அவ்வாறு அவர்கள் பயன்படுத்திய மின்சாரத்திற்கு அதிக கட்டணம் மின் வாரியத்தால் வசூலிக்கப்பட்டு வந்தது. இயற்கை சீற்றம் மற்றும் பருவம் தவறிய மழை பொழிவின் காரணமாக விளைச்சல் இல்லாததால் விவசாயிகளால் மின்சார கட்டணத்தை கட்டமுடியாத நிலையில் மின்சார வாரியம் விவசாயிகளுக்கு மிகப்பெரிய நெருக்கடி கொடுத்து வந்தது.
ஒரு புறம் கடுமையான வறட்சி நிலவிய நிலையில், தமிழக விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம் வாங்கிய பயிர் கடன் மற்றும் பண்ணை சாராத கடனை திருப்பி செலுத்த இயலவில்லை.
கடனை திருப்பி செலுத்தாவிட்டால் தமிழ்நாடு அரசு ஜப்தி என்ற சட்டத்தின் படி, விவசாயிகள் வீட்டில் உள்ள பொருட்களை ஜப்தி செய்து நடவடிக்கை எடுக்க தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் முயற்சித்தினர்.
தமிழக விவசாயிகள் படும் இன்னல்களை கருத்தில் கொண்டு சிதறிய நெல்லிக்காய் போல் கிடந்த தமிழக விவசாயிகளை, கடன் தொல்லை, மின்சார கட்டணம் உயர்வு போன்ற துயரங்களில் இருந்து காப்பாற்றுவதற்காக, தமிழக விவசாயிகள் சங்கத்தை தோற்றிவித்து மறைந்த உழவர் பெருந்தலைவர் C . நாராயணசாமி நாயுடு அவர்கள் தலைமையில் 1970 முதல் 1980 வரை தமிழகம் தழுவிய அளவில் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் தொடர் போராட்டம் நடைபெற்றது.
கடந்த பத்து ஆண்டுகளில் நடந்த போராட்டத்தில், தமிழ்நாடு அரசு காவல்துறை நடத்திய துப்பாக்கி சூட்டில், துப்பாக்கி குண்டுக்கு இறையாக்கி 53 விவசாயிகளும் இறந்துள்ளனர்.
கிணற்று மோட்டாருக்கு தமிழக அரசு யூனிட்டுக்கு பழைய கட்டணம் 8 பைசாவில் இருந்து 9 பைசாவாக கட்டணம் உயர்வின் காரணமாக தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் ஒரு பைசாவாக உயர்த்தியதை அரை பைசாவாக குறைக்க கோரி தமிழக அரசிடம் கோரிக்கை வைத்து மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றதில் தமிழகம் முழுவதும் ஸ்தம்பித்து அப்போது தமிழகத்தில் ஆட்சி செய்த ஆட்சியாளர்களை தமிழக விவசாயிகள் சங்க போராட்டத்தின் வாயிலாக மறைந்த உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு அவர்கள் தமிழக அரசை பணியவைத்தார்.
5.7.1972 ல் இந்த முதல் போராட்டத்தில் சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் பெத்தநாயக்ன்பாளையம் பகுதியை சார்ந்த 9 விவசாயிகள் மீது தமிழக காவல்துறை துப்பாக்கி சுடு நடத்தியதில் விவசாயிகள் உயிரிழந்தனர், இது போல் பல தினங்களில் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டம், தமிழகம் முழுவதும் நடைபெற்றதில் வேடசந்தூர், பெருமாநல்லூர் ,கோயில்பட்டி , குறிஞ்சாங்குளம் ஆகிய பகுதிகளில் 53 தமிழக விவசாயிகள் மீது தமிழ்நாடு அரசு காவல்துறை துப்பாக்கி சுடு நடத்தி, விவசாயிகளை கொன்று குவித்தது.
தமிழக அரசு தமிழகத்தில் முதல் துப்பாக்கி சுடு நடத்திய நாளான 5.7.1972 மறைந்த தியாகிகளுக்கு ஆண்டு தோறும் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் வீரவணக்க
நாளாக கடைபிடித்து வருகிறோம். தமிழக விவசாயிகள் கிணறு மோட்டார் மூலம் பாசனம் செய்ய இலவச மின்சாரம் கிடைக்க வழிவகை உருவாக்கி கொடுத்தது, தமிழக விவசாய சங்கம் மூலம் தான் இலவச மின்சாரம் கிடைக்க பெற்றது என்று இன்றைய தலைமுறை விவசாயிகள் கருத்தில் கொள்ளவேண்டும்.
கோவை மாவட்டம் அன்னூர் வட்டம் கோயில்பாளையம் அருகே உள்ள வையம்பாளையம் கிராமத்தில் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு அவர்கள் மணிமண்டபத்தில் நாளை காலை 10 மணிக்கு தமிழக விவசாயிகள் சங்கத்தை தோற்றிவித்து உருவாக்கிய மறைந்த உழவர் பெருந்தலைவர் திரு.C.நாராயணசாமி நாயுடு அவர்களின் 41 ஆம் ஆண்டு மறைவு தினத்தை முன்னிட்டு புகழ் படைசாற்றும் வகையில் மலர் தூவி மரியாதை செலுத்துவதற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் வருகை தரும்படி உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் அழைக்கிறேன் என்று உழவர் பெருந்தகை நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி அழைப்பு விடுத்துள்ளார்.



0 coment rios: