சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலம் வரலாற்று சங்கத்தின் சார்பில் இரு பெரும் விழா.
சேலம் வரலாற்று சங்கத்தின் சார்பில் கிறிஸ்துமஸ் விழா மற்றும் நூல் வெளியீட்டு விழா ஆகியவை சேலம் அஸ்தம்பட்டி சிஎஸ்ஐ பாலர் ஞான எழுத்தில் நடைபெற்றது. சேலம் வரலாற்றின் அடையாளங்கள் என்ற பெயரில் சேலம் வரலாறு சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜே பரண பாஸ் எழுதிய இந்த நூல் வெளியீட்டு விழாவிற்கு சேலம் வரலாறு சங்கத்தின் தலைவர் இமானுவேல் ஜெயசிங் தலைமை வகித்தார். சேலம் வரலாறு சங்கத்தின் பொருளாளர் ஞானதால் வரவேற்புரை நிகழ்த்திய இந்த விழாவில் சேலம் வரலாற்று சங்கத்தின் மேனாள் தலைவர் பேராசிரியர் ஜெயக்குமாரி அனிபால்ட் நூலினை வெளியிட்டு மகிழ்வுறை ஆற்றினார்.
சேலம் வரலாற்றுச் சங்கத்தின் செயல் தலைவர் தாரை குமரவேலு கலந்து கொண்டு நூலின் முதல் படியை பெற்றுக் கொண்டு வாழ்த்துரை வழங்கினார். ஈரோடு இதழாளர் பதிப்பாளர் மற்றும் எழுத்தாளருமான நற்றமிழ் பாவலர் சந்திரா மனோகரன் நூலாய்வு நடத்திய இந்த நிகழ்வில் எழுத்தாளர் இடைப்பாடி அமுதன் சிறப்புரையும் சேலம் வரலாற்று சங்கத்தின் பொதுச்செயலாளர் நூல் ஆசிரியருமான ஜே பர்னபாஸ் ஏற்புரையுடன் நன்றி உரையும் ஆற்றினார். சேலம் ஜாமியா மசூதியின் மொத்த வள்ளி எஸ் ஆர் அன்வர் ஏற்காடு எழுத்தாளர் இளங்கோ தமிழறிஞர் சுல்தான் மற்றும் தொழிலதிபர் ஈசன் எழில் விழியன் உள்ளிட்ட ஒரு கலந்து கொண்ட விழாவில் கேக் வெட்டி கிறிஸ்துமஸ் விழாவும் கொண்டாடப்பட்டது. விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் கேக் வழங்கப்பட்டது மட்டுமல்லாமல் மதிய உணவிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இது போக சேலம் அஸ்தம்பட்டி சிஎஸ்ஐ பாலர் ஞான இல்லத்தில் உள்ள சிறப்பு குழந்தைகளுக்கு மதிய உணவும் சேலம் வரலாற்றுச் சங்க நிர்வாகத்தின் சார்பில் வழங்கி இரு பெரும் விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர்.



0 coment rios: