சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
இஸ்லாமிய பெண்ணுக்கு எதிரான கொடுஞ்செயல். இந்திய தண்டனைச் சட்டம் அனைவருக்கும் சமம் என்ற அடிப்படையில் பீகார் முதல்வருக்கு அரபு நாடுகளை போன்று அதிகப்படியான தண்டனை விதிக்க வேண்டும்.. சேலத்தில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினரின் கண்டன ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தல்.
பீகாரில் நடைபெற்ற அரசு அரசு பணி விழா ஒன்றில் கலந்துகொண்ட இஸ்லாமிய பெண் ஒருவர் ஹிஜாப் எனப்படும் மதரீதியான உடை அணிந்து வந்து விழா மேடையில் கலந்து கொண்டார். முதலமைச்சர் நிதிஷ்குமார் இடம் பணி ஆணையை பெரும்போது, பீகார் முதலமைச்சர் இஸ்லாமிய பெண் அணிந்திருந்த ஹிஜாப் உடையை முகத்தில் இருந்து விளக்கிய அந்த செயல், நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து மாநிலங்கள் தோறும் பீகார் முதலமைச்சரின் இந்த செயலுக்கு வன்மையான கண்டனங்களும் பல்வேறு போராட்டங்களும் நிகழ்ந்து கொண்டு உள்ளன.
அதன் அடிப்படையில் சேலம் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பீகார் முதலமைச்சருக்கு எதிராக சேலம் கோட்டை மைதானத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் மாவட்ட தலைவர் மூஸா தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் வழக்கறிஞர் பிரிவு மாநில பொதுச் செயலாளர் இம்தியாஸ், மாவட்ட அமைப்பு செயலாளர் சுல்தான், மாவட்ட செயலாளர் அலாவுதீன் மற்றும் மாவட்ட பொருளாளர் ஹன்னு என்கின்ற சாதிக் பாஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டு பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமாருக்கு எதிராக பல்வேறு முழக்கங்களை எழுப்பியதோடு மட்டுமல்லாமல், திருக்குர்ஆன் எங்களது உயிர், இஸ்லாத் எங்களுடைய உயிர் மூச்சு, இஸ்லாத்தில் கூறப்பட்டுள்ளபடி பெண்கள் உடை அணியும் முறை இஸ்லாமியர்களின் உரிமை என்று முழக்கமிட்டனர்.
அனைத்து மதத்தினரும் சமமாக வழி நடத்தப்படும் இந்திய திருநாட்டில், சிறுபான்மையினரான இஸ்லாமிய பெண்ணுக்கு, பீகாரின் முதலமைச்சர் நிதிஷ்குமாரின் இந்த செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும், உடனடியாக அவரது பதவி பறிக்கப்படுவதோடு, சம்பந்தப்பட்ட இஸ்லாமிய பெண்ணிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இறுதியாக இந்திய திருநாட்டில் தண்டனைச் சட்டம் என்பது அனைவருக்கும் சமம் என்பதன் அடிப்படையில் அரபு நாடுகளில் வழங்குவதைப் போல மிக அதிகப்படியான தண்டனையை பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு இந்திய திருநாடு வழங்கி முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்றும் பதிவு செய்யப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் அஸ்லாம் முஸ்தபா ஜிலான் அம்ஜத் அஸ்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தங்களது கண்டனங்களை வெளிப்படுத்தினர்.



0 coment rios: