சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
பீகாரில் இஸ்லாமிய பெண்ணை பொது நிகழ்ச்சியில் அசிங்கப்படுத்திய விவகாரம். முதலமைச்சரின் நிதிஷ்குமாருக்கு எதிராக போர் கொடி உயர்த்தி உள்ள அரசியல் கட்சி பிரமுகர்கள்.
பீகாரில் ஐந்தாவது முறையாக முதலமைச்சராக ஆகியுள்ள நிதிஷ்குமார், நேற்று முன்தினம் நடைபெற்ற அரசு விழாவில் இஸ்லாமிய பெண்ணுக்கு நல உதவி வழங்கியதோடு மட்டுமல்லாமல் அணிந்திருந்த ஹிஜாப் என்ற உடையை பிடித்து இழுத்து பொது மேடையில் வைத்து அவரை மதரீதியாக அசிங்கப்படுத்தியுள்ளார். நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்தின் எதிரொலியாக சேதத்திலும் பீகார் முதல்வருக்கு எதிரான கண்டன குரல்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இதனிடையே இந்த சம்பவம் குறித்து அறிந்த இஸ்லாமிய அமைப்பினர் உட்பட ஏனைய கட்சியினர் நிதிஷ் குமாரின் முதலமைச்சர் பதவியை பறிக்க வேண்டும் பொது இடத்தில் பகிரங்கமாக அந்த பெண்ணிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நிதிஷ்குமார் எதிராக வழித்து வருகின்றன. இந்த நிலையில் நிதிஷ்குமாரின் இந்த செயல் சேலம் மாவட்டத்தையும் விட்டு வைக்கவில்லை. தொடர்ச்சியாக கண்டன குரல்களும் கண்டன பதிவுகளும் நிகழ்ந்து கொண்டுதான் உள்ளது. அந்த வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சில மாநகர் மாவட்ட செயலாளர் காஜா மைதீன் தனது கண்டனத்தை பதிவு செய்கையில்,
ஹிஜாப் என்ற உடை அணிவது இஸ்லாமியர்களின் தொன்று தொட்டு நடக்கக்கூடிய தலையாய கடமை ஆகும். அப்படி இருக்க முதலமைச்சர் கலந்து கொள்ளும் அரசு விழா ஒன்றில் கலந்து கொள்பவர்களை காவல்துறையினர் பல கட்டங்களாக சோதனை மேற்கொண்டு தான் விழாவிற்குள் அனுமதிப்பார்கள். இந்த நிலையில் பொது நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் ஒரு முதலமைச்சர் பொறுப்பில் உள்ள நிதிஷ்குமார் இஸ்லாமிய பெண்ணின் ஹிஜாபை இழுத்து அசிங்கப்படுத்தியது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும், பௌத்த மதத்தினர் வாயில் திரையிட்டு பயணிப்பதும், இதே போல சீக்கியர்கள் பாரம்பரியமாக தங்களது இடுப்பு பகுதியில் குத்து அருவாளை வைத்திருப்பதும் பாரம்பரியமாக கருதுகின்றனர் அவர்களிடம் அதாவது சீக்கியர்களிடம் குத்தறுவாளை எடுத்தோ அல்லது பௌத்த மதத்தினர் அணிந்துள்ள முகத்திரையை அவில்தோ அவர்களை அசிங்கப்படுத்த தைரியம் உண்டா நிதீஷ் குமாருக்கு என்று கேள்வி எழுப்பிய அவர் இஸ்லாமிய பெண்ணை அசிங்கப்படுத்திய நிதீஷ் குமாரை கண்டித்து சேலத்தில் விரைவில் மிகப்பெரிய அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார்.
இதே போல இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் இம்தியாஸ் கூறுகையில்,
பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாருக்கு மற்ற மதத்தினரை புண்படுத்துவதும் அசிங்கப்படுத்துவதும் வாடிக்கையான ஒன்று என்று கூறிய அவர் பல உதாரணங்களை முன் வைத்தார். அந்த வகையில் சிறுபான்மை சமூகமான இஸ்லாமிய பெண்ணை ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் பொது நிகழ்வில் இது போன்று அவர் அசிங்கப்படுத்தியது அவமானப்படுத்தியது மிகப்பெரிய கண்டனத்திற்கு உரியது என்றும் உடனடியாக முதல்வர் பதவி வகிக்கும் நிதீஷ் குமாரிடமிருந்து அந்த பதவியை பறிக்க வேண்டும் என்றும் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தார்.
அது மட்டுமல்லாமல் சேலம் ஜாமியா மசூதியில் டிரஸ்டி இமாம் அகமது தனது ஆதங்கத்தை பதிவிடுகையில்,
இறைத்தூதர் ஷல் அல்லா அவர்களின் வழிகாட்டுதலின் அடிப்படையில் இஸ்லாமிய சமூகத்தைச் சார்ந்த பெண்கள் ஹிஜாப் அணிவது அவர்களது உரிமை என்றும் அந்த உரிமையை மீறும் வகையில் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாருக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்புகள் வலுத்து வரும் நிலையில், நாடு முழுவதும் உள்ள இஸ்லாமிய தலைவர்கள் ஒன்றிணைந்தும், கூடுதலாக நீதிமன்றங்கள் தாமாக முன்வந்து நிதிஷ்குமார் அவர்களின் முதலமைச்சர் பதவியை உடனடியாக பறிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இதே போல தேசிய மக்கள் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் ராம்ஜி தனது ஆதங்க குரலில் வெளிப்படுத்துகையில், பொது இடங்களில் இஸ்லாமிய பெண்கள் தனது முகத்தை காட்டுவதும் அதை ஹிஜாப் அணிந்து மறைப்பதும் அவரவர் விருப்பம் என்று பதிவிட்ட அவர், நாடு முழுவதும் எதிர்ப்பு வலுத்திருக்கும் இந்த சூழலில் அவர் தானாக முன்வந்து தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டதோடு மட்டுமல்லாமல் தற்பொழுது பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்கும் காரணத்தினால் எந்த தலைவரை அவரை மகிழ்விப்பதற்காக இது போன்ற செயலில் ஒரு மதத்தை சார்ந்த பெண்ணை அசிங்கப்படுத்தி அவமானப்படுத்தியது சரியா என்ற கேள்வியையும் முன் வைத்துள்ளார். நாடு முழுவதும் எழுந்துள்ள பீகார் முதலமைச்சரின் இந்த செயலுக்கு பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் என்ன பதில் கூறுகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.



0 coment rios: