ஈரோடு தாலுக்கா காவல் நிலையம் - சட்டவிரோதமாக கஞ்சா செடி வளர்த்திய
நபர் கைது
ஈரோடு மாவட்டத்தில் சட்ட விரோத செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில், ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.A.சுஜாதா அவர்களின் நேரடி மேற்பார்வையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று 16.12.2025 ம் தேதி மாலை ஈரோடு தாலுக்கா காவல் நிலையத்திற்குட்பட்ட தெற்கு பள்ளம், வன்னியர் காலனியில் சட்டவிரோதமாக கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டுள்ளதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் ஈரோடு தாலுக்கா காவல் நிலைய போலீசார் மேற்படி வன்னியர் காலனியில் உள்ள மினியப்பன் என்பவரின் மகன் சிவலிங்கம்(49) என்பவருக்கு சொந்தமான உபயோகப்படுத்தப்படாத வீட்டின் பின்புறம் அதே பகுதியை சேர்ந்த பெருமாள் மகன் மாரிமுத்து (எ) பாம்புகாரர் ரமேஷ்(64) என்பவருடன் சேர்ந்து சட்ட விரோதமாக 3 கஞ்சா செடிகளை (1/2 அடியில் 2 செடிகள் மற்றும் 3 அடியில் 1 செடி எடை 300 கிராம்) வளர்த்து வந்தது தெரியவந்தது. மேலும் அவ்விடத்திலிருந்த மேற்படி சிவலிங்கம் மற்றும் மாரிமுத்து (எ) பாம்புகாரர் ரமேஷ் ஆகியோரை பிடித்து விசாரித்தும், அவர்களுக்கு சொந்தமான அவ்விடத்தில் நிறுத்தப்பட்டிருந்த Hero Pleasure TN 56 MM 5091 மற்றும் Honda Activa TN 56 P1026 ஆகிய இரண்டு இருசக்கர வாகனங்களிலும் சோதனை செய்த போது அதிலிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த தலா 100 கிராம் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்ததை பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்த கஞ்சா, கஞ்சா செடிகள், இருசக்கர வாகனங்களை மற்றும் எதிரிகளை நிலையம் கொண்டுவரப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்பட்டு, எதிரிகள் இருவரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டது என்பதை தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.



0 coment rios: