சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலத்தில் வெள்ளி வியாபாரியிடம் 55 கிலோ மதிப்புடைய வெள்ளியை தராமல், சுமார் 85 லட்சம் ரூபாய் மோசடி செய்து வெள்ளி வியாபாரி. பாதிக்கப்பட்ட வெள்ளி வியாபாரி சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு.
இந்தியாவில் தங்கத்திற்கு நிகராக வெள்ளி விளையும் ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகின்றது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் தங்கம் மற்றும் வெள்ளி உள்ளிட்ட வியாபாரங்களில் ஈடுபட்டு வருபவர்களிடையே மோசடி புகார்களும் அவ்வப்போது எழுந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியை சார்ந்த வெள்ளி ஆபரண வியாபாரி சந்தோஷ்குமார் தனது வழக்கறிஞர் இம்தியாஸ் அவர்களுடன் புகார் மனு அளிப்பதற்காக சேலம் மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகத்திற்கு வந்திருந்தார். அந்த மனுவில், தனது தந்தை தொடங்கிய ஸ்ரீ மகாலட்சுமி சில்வர்ஸ் என்ற நிறுவனத்தை தொடர்ந்து தானே நடத்தி வருகிறார்.
வெளி மாநிலங்களுக்கு அரசு விதித்துள்ள வரியை முறையாக செலுத்தி வெள்ளி ஆபரண வியாபாரம் செய்து வரும் தன்னிடம் சேலம் செவ்வாய்பேட்டை பகுதியைச் சார்ந்த சுபம் சில்வர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் வேணுகோபால் என்பவர் தொழில் ரீதியாக கடந்த மூன்று ஆண்டுகளாக பழகி தன்னிடம் வெள்ளி வியாபாரம் செய்து வந்ததாகவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி வெள்ளி வாங்குவதற்காக ஸ்ரீ மகாலட்சுமி சில்வர்ஸ் நிறுவனத்தின் வங்கி கணக்கில் இருந்து, சம்பந்தப்பட்ட சுபம் சில்வர்ஸ் நிறுவன வங்கி கணக்கிற்கு 17. 4 , 12. 7 , 11. 9 மற்றும் 4. 12 ஆகிய நான்கு தேதிகளில் 1 கோடியே 75 லட்சத்து 16 ஆயிரத்து 200 ரூபாய் மொத்தமாக செலுத்தப்பட்டதாகவும், இந்தத் தொகையில் 91 லட்சத்து 66 ஆயிரத்து 200 ரூபாய் மதிப்பிலான வெள்ளியை மட்டும் பெற்றுக் கொண்டதாகவும், மீதமுள்ள 83.50 லட்ச ரூபாய் மதிப்பிலான 55 கிலோ மதிப்புள்ள வெள்ளிக்கட்டி பெறவில்லை என்றும் குறிப்பிட்டிருந்த மனுவில் மீதமுள்ள வெள்ளியை சுபம் சில்வர்ஸ் நிறுவன உரிமையாளர் வேணுகோபாலிடம் கேட்டபோது நான் தொடர்ச்சியாக அலை கழித்து ஏமாற்றி வருவதாகவும், சம்பந்தப்பட்ட வேணுகோபால் என்பவர் மீது நடவடிக்கை எடுத்து மீதமுள்ள 83 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புடைய 55 கிலோ வெள்ளியை மீட்டு தர வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
மனுவினை பெற்றுக் கொண்ட சேலம் மாநகராட்சி காவல் ஆணையர் மனு மீது உரிய நடவடிக்கை எடுத்து மீதமுள்ள வெளியே மீட்டு தருவதாகவும் உறுதியளித்துள்ளார்.



0 coment rios: