சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
தமிழக விவசாயிகளின் பிரதான கோரிக்கையினை நிறைவேற்ற தவறிய தமிழக அரசனை கண்டித்து வரும் 29ஆம் தேதி மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் கரவை மாடுகளுடன் மறியல் போராட்டம் நடத்திட வேண்டும். தமிழக அரசை கண்டித்து உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி அறிக்கையின் வாயிலாக அறிவிப்பு.
தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் வேலுச்சாமி அறிக்கையின் வாயிலாக பசு மற்றும் எருமை பால் இருக்கு கொள்முதல் விலையை உயர்த்தி வழங்காத தமிழக அரசை கண்டித்து போராட்ட அறிவிப்பு ஒன்றினை அறிகையின் வாயிலாக வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், தமிழ்நாடு அரசு ஆவின் கூட்டுறவு ஒன்றியம் மூலம் விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்யும் பசும் பால் மற்றும் எருமைப்பால் ஆகியவற்றுக்கான விலையை தற்போதைய விலையில் இருந்து லிட்டர் ஒன்றுக்கு ரூ.15 உயர்த்தி வழங்காததை கண்டித்து உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் தலைமையில் வருகின்ற 29.12.2025 காலை 10 மணிக்கு தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகள் சங்க அமைப்புக்கள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கால்நடைகளுடன் மாநில நெடுஞ்சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.



0 coment rios: