சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
த.வெ.க உயர் மட்ட குழு மாநில ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்த தமிழ்நாடு மக்கள் உரிமை கட்சியின் மாநில தலைவர் வழக்கறிஞர் பூமொழி.
தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை ஒட்டி தற்பொழுது தமிழக தேர்தல் களம் தற்பொழுதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் உயர்மட்ட குழு மாநில ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் தமிழக அமைச்சருமான செங்கோட்டையன் அவர்களை ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள அவரது இல்லத்தில், தமிழ்நாடு மக்கள் உரிமை கட்சியின் மாநில தலைவரும் வழக்கறிஞருமான சேலம் பூமொழி, நிர்வாகிகளுடன் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
அப்போது செங்கோட்டையன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தியும் பூங்கொத்து கொடுத்தும் மரியாதை செய்த பூமொழிக்கு பதிலுக்கு செங்கோட்டையன் அவர்களும் பூமொழி அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி தனது மரியாதையை திரும்ப செலுத்தினார்.
தொடர்ந்து எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு செயல்பாடுகள் குறித்தும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகவும், இதுபோக பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும் தெரிகிறது. இந்த மரியாதை நிமித்த நிகழ்வின்போது தமிழ்நாடு மக்கள் உரிமை கட்சியின் நிர்வாகிகள் பலரும் உடன் இருந்தனர்.



0 coment rios: