சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
மறைந்த அ.இ.அ.தி.மு.க பொதுச்செயலாளர் செல்வி ஜெயலலிதா அவர்களின் 9 ஆவது ஆண்டு நினைவு தினம். சேலம் அஸ்தம்பட்டி பகுதி அதிமுக சார்பில் அம்மையாரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை.
காலம் சென்ற அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான செல்வி ஜெயலலிதா அவர்களின் 9 ஆம் ஆண்டு நினைவு தினம் அதிமுகவினரால் இன்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க சேலம் மாநகரம் உட்பட மாவட்ட முழுவதும் அம்மையாரின் நினைவு தினம் கட்சியினரால் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சேலம் மாநகர் மாவட்ட அதிமுக அஸ்தம்பட்டி பகுதி கழகத்தின் சார்பில் அம்மையாரின் 9 வது நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது.
சேலம் 30 வது கோட்டம் சார்பில் தேர்முட்டி பகுதியில் நடைபெற்றது. அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த செல்வி ஜெயலலிதா அவர்களின் திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஸ்தம்பட்டி பகுதி கோட்ட செயலாளர் சந்தோஷ் குமார் மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் துணைச் செயலாளர் வெங்கடேஸ்வரன், கட்சியின் அவை தலைவர் இளங்கோ, உட்பட கட்சி நிர்வாகிகள் தேவராஜ் மோகன்ராஜ் ராஜாராம் மற்றும் புகழேந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு அம்மையாரின் திரு உருவப்படத்திற்கு மலர்களை தூவி மரியாதை செய்தனர்.



0 coment rios: