சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
மறைந்த அ.இ.அ.தி.மு.க பொதுச்செயலாளர் செல்வி ஜெயலலிதா அவர்களின் 9 வது ஆண்டு நினைவு தினம். சேலம் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மௌன ஊர்வலம் மற்றும் மணிமண்டபத்தில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த அதிமுகவினர்.
மக்களால் நான் மக்களுக்காகவே நான் என்று வாழ்ந்து காலம் சென்ற அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சர் ஆன செல்வி ஜெயலலிதா அவர்களின் 9 ஆம் ஆண்டு நினைவு தினம் அதிமுகவினரால் இன்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க சேலம் மாநகரம் உட்பட மாவட்ட முழுவதும் அம்மையாரின் நினைவு தினம் கட்சியினரால் அனுஷ்டிக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக சேலம் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் அம்மையாரின் 9 வது நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. முன்னதாக சேலம் நான்கு ரோடு பகுதியில் சேலம் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் ஏ கே எஸ் எம் பாலு தலைமையில் திரண்ட அதிமுக நிர்வாகிகள் மௌன ஊர்வலமாக சேலம் அண்ணா பூங்காவில் அமைக்கப்பட்டு உள்ள எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர்களது மணிமண்டபத்திற்கு வந்தனர்.
தொடர்ந்து மணிமண்டபத்தில் உள்ள காலம் சென்ற அதிமுக நிறுவன தலைவரும் முன்னாள் முதலமைச்சர்களுமான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர்களின் திருவுருவச் சிலைகளுக்கு அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் ஏ கே எஸ் எம் பாலு மற்றும் சேலம் மாநகர் மாவட்ட அதிமுக பொறுப்பாளர் சிங்காரம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்த இந்த நிகழ்வில், சேலம் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பாலசுப்பிரமணியன், முன்னாள் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ரவிச்சந்திரன், எம் கே செல்வராஜ் மற்றும் ஏபி சக்திவேல் உட்பட அம்மாபேட்டை பகுதி செயலாளர் யாதவமூர்த்தி மற்றும் எஸ் எஸ் கிருஷ்ணமூர்த்தி உட்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அதிமுகவினர் என ஏராளமானோர் கலந்து கொண்டு இரு பெரும் தலைவர்களின் திருவுருவ சிலைக்கு மரியாதை செய்தனர்.
இந்த நிகழ்வில் முக்கிய நிர்வாகிகள் பெரும்பாலானோர் கருப்பு சட்டையை அணிந்து தங்களது தலைவர்களுக்கான நினைவு தினத்தை அனுஷ்டித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.



0 coment rios: