சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலம் அயோத்தியாபட்டணம் ரயில்வே கேட்டில் மேம்பாலம் கட்டி தர வேண்டி மத்திய மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆர்ப்பாட்டம். பாமகவினரின் இந்த போராட்டத்தின் போது இரண்டு முறை ரயில்வே கேட் மூடப்பட்டு கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்ட அவலம்.
சேலத்தை அடுத்துள்ள அயோத்தியா பட்டணம் ரயில்வே கேட் பகுதி என்பது 24 மணி நேரமும் மிகக் கடுமையான போக்குவரத்தை கொண்ட பகுதியாகும், சேலத்தில் இருந்து ஆத்தூர் ஆத்தூர் வழியாக சென்னை மார்க்கம் செல்லும் அரசு பேருந்துகளும், இதே போல சேலத்தில் இருந்து அயோத்தியாப்பட்டணம் வழியாக திருப்பத்தூர் செல்லும் அரசு பேருந்துகள் உட்பட இதர இரு சக்கரை, நான்கு சக்கர மற்றும் கனரக வாகனங்கள் நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கில் பயணித்து வருகின்றன. இதனுடைய சம்பந்தப்பட்ட அயோத்தியாபட்டினம் ரயில்வே கேட் நாள் ஒன்று இருக்கு பத்துக்கும் மேற்பட்ட நேரங்களில் மூடப்படுவதால் வாகனங்கள் பெரும் நெருக்கடியில் போக்குவரத்து முடங்கி விடுகிறது. இதனால் ஆம்புலன்ஸ் பள்ளி கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் அரசு அலுவலகம் வியாபாரிகள் என அனைத்து பொதுமக்களும் கடும் எச்சரிக்கை காலதாமதத்தையும் சந்தித்து வருவதை அனைவரும் அன்றாடம் காணக்கூடிய ஒன்றே. இந்த அவல நிலையை போக்க பாமக மாநில தலைவர் முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் அன்புமணி வாயிலாக மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி அவர்களை நேரில் சந்தித்து நிலைமையை விளக்கி கடந்த ஜனவரி மாதம் மனுவும் வழங்கப்பட்டது. இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மத்திய மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சேலம் வடக்கு மாவட்ட அயோத்தியாப்பட்டணம் ஒன்றியம் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் பொதுமக்களின் 25 ஆண்டு கால கோரிக்கையான அயோத்தியபட்டினம் ரயில்வே கேட் முன்பாக மேம்பாலம் கட்டி தர வேண்டி மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அயோத்தியபட்டணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு சேலம் மாவட்ட ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவரும் வடக்கு மாவட்ட செயலாளருமான நாராயணன் தலைமையில் நடைபெற்ற இந்த கவனத்தில் ஆர்ப்பாட்டத்தில் பாமக மாநில மாணவர் அணி தலைவர் வழக்கறிஞர் விஜயராஜா உட்பட நிர்வாகிகள் குமாரசாமி ராஜா மாது மற்றும் வேணும் ஊழிய விட்டு ஒரு முன்னிலை வகித்தனர். பாமக முன்னால் சட்டமன்ற உறுப்பினரும், மாநில நிர்வாக குழு உறுப்பினரும் மற்றும் வன்னியர் சங்க மாநில ஒருங்கிணைப்பாளருமான மு. கார்த்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அயோத்தியபட்டணம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மக்களின் கடந்த 25 ஆண்டு கால கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார். தொடர்ந்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கடும் போக்குவரத்து நெரிசலை சந்தித்து வரும் அயோத்தியபட்டணம் ரயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் கட்டி தர வேண்டும், ரயில்வே கேட் முதல் வெள்ளையப்பன் கோவில் வரை நான்கு வழிச்சாலையாக அமைத்து தர வேண்டும் மற்றும் அரூர் ரோடு பழுதடைந்து உலகை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
அந்தப் பகுதி பொதுமக்களின் 25 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றி தர மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி பாமகவினர் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்படும் போது இரண்டு முறை ரயில்வே கேட் மூடப்பட்டு கடுமையான போக்குவரத்து நெரிசலையும், பாமக தலைவரும் முன்னாள் மதிய சுகாதாரத்துறை அமைச்சர் ஆன அன்புமணி கொண்டு வந்த தீயிட்டு ஆம்புலன்ஸ் இந்த போக்குவரத்து நெரிசலில் சிக்கி நோயாளியை உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாத அவல நிலையையும், சம்பந்தப்பட்ட அயோத்தியா பட்டணம் பகுதி சந்தித்தது என்பது மறுக்க முடியாத உண்மை. பாமக தலைவரும் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி கொண்டுவந்த 108 ஆம்புலன்ஸ் கூட உரிய நேரத்திற்கு செல்ல முடியாமல் தவித்த அந்த போக்குவரத்து நெரிசலை சீர் செய்ய மத்திய மாநில அரசுகள் உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்து அயோத்தியாபட்டினம் ரயில்வே கேட் முன்பு மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்குமா பொருத்திருந்து பார்ப்போம். சபா நியூஸ் தமிழ் செய்திகளுக்காக சேலத்தில் இருந்து எஸ் கே சுரேஷ் பாபு.



0 coment rios: