சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
மலபார் கோல்ட் & டைமண்ட்ஸ் சேலத்தில் புதுப்பிக்கப்பட்ட பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு விழா
மலபார் கோல்ட் & டைமண்ட்ஸ் சேலத்தில் தனது புதுப்பிக்கப்பட்ட பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு விழாவை முன்னிட்டு திறப்பு விழா சலுகையாக டிசம்பர் 16 2025 வரை ஒவ்வொரு முறை தங்க நகைகள் வாங்கும் போதும் வெள்ளி நாணயம் இலவசமாக வழங்குகிறார்கள். உலகின் சில்லறை நகை விற்பனையில் வேகமாக வளர்ந்து வரும் முன்னணி நிறுவனமும் இந்தியாவில் பல்வேறு துறைகளில் கால் பதித்து தனது வர்த்தகத்தை விரிவாக்கி கொண்டுள்ள மலபார் குழுமத்தின் முன்னோடி நிறுவனமான மலபார் கோல்ட் & டைமண்ட்ஸ் நிறுவனம் சேலத்தில் பிரமாண்டமாக புதுப்பிக்கப்பட்ட ஷோரூமை திறந்துள்ளது. இந்த ஷோரூமில் அதிகமான இடவசதி, புதிய மாடல்கள் மற்றும் டிசைன்களில் தங்கம், வைரம் மற்றும் வெள்ளி நகைகளின் கலெக்சன்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளன. இந்த ஷோரூமை தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் இராஜேந்திரன் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் தலைவர் தமிழ்நாடு மண்டல தலைவர் யாசர், சபீர் அலி, நௌசாத், முகமது அசரப், மேலாண்மை உறுப்பினர்கள் மற்றும் கிளை ஊழியர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
மலபார் கோல்ட் அண்ட் டைமண்ட்ஸ் தற்போது 14 நாடுகளில் 425-க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை நிலையங்களுடன் உலகில் மிகப்பெரிய நகை விற்பனை நிறுவனமாக உருவெடுத்துள்ளது தமிழ்நாட்டில் சென்னை கோவை மதுரை நாகர்கோவில் திருநெல்வேலி சேலம், புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் 32 கிளைகளை கொண்டுள்ளது.
மலபார் கோல்ட் & டைமண்ட்ஸ் விற்பனையகத்தில் கலை நியமிக்க அணிகலன்கள் கிடைப்பது சிறப்பம்சமாகும். அணிந்தாலே ஜொலிக்கும் வைர நகைகளான 'மைன்', பிரம்மாண்டமான வடிவமைப்புகளை கொண்டுள்ள வெட்டாத வைரத்தால் செய்யப்பட்ட ஏரா, மிகவும் பொக்கிஷமாக கருதப்படும் விலையுயர்ந்த கற்களால் செய்யப்பட்ட நகை தொகுப்பான பிரீசியா நகைகள், கைவினை கலைஞர்களால் கையால் நேர்த்தியாக செய்யப்பட்ட நகைகளின் தொகுப்பான எத்தினிக், கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் பாரம்பரிய இந்திய நகை வடிவங்களில் உருவான டிவைன், குழந்தைகளுக்கான நகை தொகுப்பான ஸ்டார்லெட் ஆகியவை இந்த ஷோரூமில் இடம் பெற்றுள்ளன.



0 coment rios: