சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சேலம் தெற்கு மாவட்ட செயலாளராக திருமதி காயத்ரி அவர்களை நியமித்து விடுதலை சிறுத்தை கட்சி அறிவிப்பு. பொறுப்பேற்ற பிறகு சேலம் வந்த அவருக்கு அம்மாபேட்டை பகுதியில் அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு. தொடர்ந்து அம்பேத்கர் மற்றும் பெரியார் உள்ளிட்டோரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து சேலம் தெற்கு மாவட்ட விசிக செயலாளர் திருமதி காயத்ரி.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளராக கி.காயத்ரி விடுதலை சிறுத்தை கட்சி அறிவித்து இருந்தது. அதன் அடிப்படையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சேலம் தெற்கு மாவட்ட செயலாளராக
திருமதி. காயத்ரி அவர்களை அறிவித்து விடுதலை சிறுத்தை கட்சி அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் அறிவிப்பினை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சி தமிழர் தொல். திருமாவளவன் அறிவித்திருந்தார். இதனை தொடர்ந்து சேலம் அம்மாபேட்டை பகுதிக்கு வருகை தந்த சேலம் தெற்கு தொகுதி மாவட்ட செயலாளர் திருமதி. காயத்ரிக்கு அவர்களுக்கு அப்பகுதி பொதுமக்கள் மேளதாளம் முழங்க பட்டாசுகள் வெடித்தும் இனிப்பு வழங்கையும் கொண்டாடினர். மேலும் ஆளுயர மாலையை அணிவித்து மகிழ்ச்சியை தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து சேலம் மாவட்ட மைய நூலகம் அருகே அமைந்துள்ள இந்திய அரசியலமைப்பின் தலைவர் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வதற்காக தனது ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக வந்து மிகப்பிரமாண்ட மாலையை சட்ட மாமேதை புரட்சியாளர் அம்பேத்கரின் ஆளுயர திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அவர், தொடர்ந்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அமைக்கப்பட்டுள்ள தந்தை பெரியாரின் திருவுருவ சிலைக்கு மேளதாளங்கள் முழங்க ஆதரவாளர்களின் புடை சூழ ஊர்வலமாக சென்ற அவர் அதேபோன்று பிரம்மாண்ட மாலை அணிவித்து மரியாதை செய்தார். தொடர்ந்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கியும் தனக்கு பொறுப்பு வழங்கிய கட்சி தலைமைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் இனிப்புகளை வழங்கி கொண்டாடி மகிழ்ந்தார் திருமதி காயத்ரி.
சேலம் தெற்கு மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் ஒரு அடிப்படை தேவை என்றால் கூட காயத்ரி அவர்கள் செய்து தந்ததாகவும் பொது மக்களின் தேவை அறிந்து தொடர்ந்து பொது சேவையையும் பலவிதமான சமூகப் பணிகளையும் செய்து வந்த செயலுக்கு தற்போது அவருக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியில் சேலம் தெற்கு மாவட்ட பகுதிக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது எங்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள், மாவட்ட பொறுப்பாளர்கள், தொகுதி நிர்வாகிகள் உள்ளிட்ட பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



0 coment rios: