சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
திமுக அரசு தனது நிதிநிலை அறிக்கையில் அறிவித்தபடி ஒன்பது மாதங்களாகியும் கரும்பு டன் போன்றிருக்கு 4000 ரூபாய் உயர்த்தி வழங்காதது கண்டிக்கத்தக்கது. வரும் பத்தாம் தேதி மோகனூர் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு கரும்பு விவசாயிகள் பெரும் திரளாக பங்கேற்க வேண்டும். உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி அறிக்கையின் வாயிலாக அழைப்பு.
இது தொடர்பாக அவர் வெளியில் உள்ள தனது அறிகையில், தமிழக அரசு 2025 மற்றும் 2026 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் மானிய கோரிக்கையின் போது தமிழகத்தில் கரும்பு சாகுபடி செய்த விவசாயிகளின் நலன் கருதி கரும்பு தன் ஒன்றிற்கு நான்காயிரம் ரூபாய் உயர்த்தி வழங்கப்படும் என்று கடந்த 9 மாதங்களுக்கு முன்பு அறிவித்து இருந்தது. தற்பொழுது வரை இந்த அறிவிப்பு தொடர்பான அரசாணை வெளியிடப்படவில்லை. தற்பொழுது இந்த ஆண்டிற்கு உண்டான கரும்பு அறுவை பருவம் தொடங்கி உள்ள நிலையில் கரும்பை வெட்டி சர்க்கரை ஆலைகளுக்கு அனுப்ப விவசாயிகளுக்கு ஆளை நிர்வாகம் விவசாயிகளுக்கு பழைய கிரைய தொகையான 3, 290.50 மட்டுமே தான் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை வழங்கி வருகிறது.
கரும்பு டன் கொண்டு இருக்கு நான்காயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்து ஒன்பது மாதங்கள் ஆகியும் இதுவரை வழங்கப்படவில்லை என்பது வேதனையின் உச்சம். இது தமிழக கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஏமாற்றமே என்பது மட்டும் நிதர்சனமான உண்மை. தமிழக அரசின் இந்த செயலை கண்டித்து வரும் பத்தாம் தேதி காலை 11 மணியளவில் நாமக்கல் மாவட்டம் மோகனூர் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலயம் முன்பாக முதற்கட்டமாக உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு அவர்களின் தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நாமக்கல் மாவட்டம் மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்பு சப்ளை செய்த செய்து வரும் அனைத்து விவசாய பெருங்குடி மக்களும் பங்கேற்க வேண்டும் என்று உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு அவர்களின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி அறிக்கை வாயிலாக அழைப்பு விடுத்துள்ளார்.



0 coment rios: