ஞாயிறு, 4 ஜனவரி, 2026

தமிழர் திருநாளை முன்னிட்டு திராவிட பொங்கல் 2026 என்ற தலைப்பில் மாபெரும் விளையாட்டு விழா. வீரபாண்டி ஒன்றிய திமுக செயலாளர் திருமதி வெண்ணிலா சேகர் தொடங்கி வைத்தார்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

தமிழர் திருநாளை முன்னிட்டு திராவிட பொங்கல் 2026 என்ற தலைப்பில் மாபெரும் விளையாட்டு விழா. வீரபாண்டி ஒன்றிய திமுக செயலாளர் திருமதி வெண்ணிலா சேகர் தொடங்கி வைத்தார். 

தமிழர் திருநாளாம் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு சேலம் கிழக்கு மாவட்ட தெற்கு ஒன்றிய திமுக சார்பில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் சேலத்தை அடுத்துள்ள பெரிய சீரகாப்பாடி ராஜாஜி பாலிடெக்னிக் கல்லூரியில் ஒன்றிய அளவிலான கிரிக்கெட் போட்டி நேற்று தொடங்கியது. இந்த நிலையில் ஒன்றிய அளவிலான கைப்பந்து போட்டிகள் சேலம் உத்தமசோழபுரத்தில் உள்ள வி எஸ் ஏ பொறியியல் கல்லூரியில் தொடங்கியது. 
ஒன்றிய அளவில் ஆறு அணிகள் பங்கேற்ற இல்ல துவக்கு விழாவிற்கு சேலம் கிழக்கு மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு பிரிவின் மாவட்ட  அமைப்பாளர் பிரண்ட்ஸ் ரமேஷ் தலைமை வகித்தார். விழாவில் சேலம் வீரபாண்டி ஒன்றிய திமுக செயலாளர் திருமதி வெண்ணிலா சேகர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு திராவிட பொங்கல் விளையாட்டு விழாவினை தொடங்கி வைத்தார். போட்டியில் பங்கேற்ற அணி வீரர்கள் தங்களது முழு திறமைகளை வெளிப்படுத்தி  விளையாடினர். தொடர்ந்து கோகோ மற்றும் கபடி போட்டிகள் நடத்தப்பட உள்ளதாகவும், முதல் மூன்று இடங்களை பிடித்து வெற்றி பெறும் அணிகளுக்கு நினைவு பரிசு உள்ளிட்டவை வழங்கப்படுவதோடு, இவர்கள் மாவட்ட அளவிலும் பின்னர் மாநில அளவில் நடைபெறும் போட்டியில் கலந்து வெற்றி பெற்று தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் கைகளால் பரிசு பொருட்களை பெற உள்ளனர் என்று வீரபாண்டி ஒன்றிய திமுக செயலாளர் திருமதி வெண்ணிலா சேகர் தெரிவித்தார். 
இந்த துவக்க விழாவில், ஒன்றிய துணைச் செயலாளர் செந்தில்குமார், மாணவர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் வேங்கையன், ஒன்றிய விளையாட்டு பிரிவு துணை அமைப்பாளர் ஆத்துக்காரர் ரமேஷ் சூர்யா தினேஷ் மற்றும் கிளைச் செயலாளர் செல்வம் உடையார் கலந்து கொண்டனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: