சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்களை கூட்டணி அமைப்பது தொடர்பாக பாமக மாநில தலைவர் டாக்டர் அன்புமணி நேரில் சந்திப்பு.
தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை ஒட்டி தற்பொழுது தமிழக தேர்தல் களம் தற்பொழுதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில், தற்பொழுது தமிழகத்தில் உள்ள பிரதான கட்சி தலைவர்கள் பல்வேறு பெயர்களில் மக்களை சந்திக்கும் நிகழ்ச்சிகளை தொடங்கி அதன்படி பயணித்து வருகின்றனர். இந்த நிலையில் எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில தலைவர் டாக்டர் அன்புமணி அவர்கள் அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்களை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த பேச்சு வார்த்தையின் போது பாமக மாநில ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கார்த்தி, பாமக மாநில பொருளாளர் திலகபாமா, மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் சதாசிவம், வெங்கடேஷ் மற்றும் சிவக்குமார் உள்ளிட்ட ஒன்பது நிர்வாகிகள் இந்த பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டனர். முன்னதாக கிரீன்வேஸ் சாலையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் இல்லத்தில் சந்தித்த போது பாமக தலைவர் டாக்டர் அன்புமணி பொன்னாடை போர்த்தியும், பூங்கொத்து கொளுத்தும் கௌரவித்தார். பதிலுக்கு எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் டாக்டர் அன்புமணி அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செய்தார். இதே போல பாமக மாநில ஒருங்கிணைப்பாளர் கார்த்தி உட்பட முக்கிய நிர்வாகிகள் அனைவரும் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர். தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது அதிமுகவுடன் பாமக கூட்டணி உறுதி செய்யப்பட்டது. மேலும் அதிமுக கூட்டணியில் பாமக எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்பதனையும், பாமகவிற்கு என்று ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் யாரெல்லாம் வேட்பாளர்களாக களம் காண போகிறார்கள் என்பதனையும் மிக விரைவில் பாமக தலைவர் டாக்டர் அன்புமணி அறிவிப்பார் என அந்த கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளரும், சேலம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கார்த்தி தெரிவித்தார்.



0 coment rios: