சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
திமுக அரசு தனது நிதிநிலை அறிக்கையில் அறிவித்தபடி ஒன்பது மாதங்களாகியும் கரும்பு டன் ஒன்றிருக்கு 4000 ரூபாய் உயர்த்தி வழங்காதது கண்டித்து, மோகனூர் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு தமிழக விவசாயிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம். நடைபெறவுள்ள 2026 சட்டமன்ற தேர்தலில் எதிர்க்கட்சியாக கூட அமர முடியாமல் திமுக அரசை விரட்டியடிப்போம். நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி தமிழக அரசுக்கு கடும் எச்சரிக்கையுடன் சூளுரை.
தமிழக அரசு ஏற்கனவே அறிவித்தபடி கரும்பு டன் ஒன்றுக்கு நான்காயிரம் ரூபாய் உயர்த்து வழங்காதத கண்டித்து நாராயணசாமி நாயுடு அவர்களின் தமிழக விவசாயிகள் சங்கத்தினர் நாமக்கல் மாவட்டம் மோகனூர் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்கத்தின் மாநில தலைவர் வேலுச்சாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாநில மற்றும் மாவட்ட முக்கிய நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தமிழக அரசு 2025 மற்றும் 2026 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் மானிய கோரிக்கையின் போது தமிழகத்தில் கரும்பு சாகுபடி செய்த விவசாயிகளின் நலன் கருதி கரும்பு தன் ஒன்றிற்கு நான்காயிரம் ரூபாய் உயர்த்தி வழங்கப்படும் என்று கடந்த 9 மாதங்களுக்கு முன்பு அறிவித்து இருந்தது. தற்பொழுது வரை இந்த அறிவிப்பு தொடர்பான அரசாணை வெளியிடப்படவில்லை. தற்பொழுது இந்த ஆண்டிற்கு உண்டான கரும்பு அறுவை பருவம் தொடங்கி உள்ள நிலையில் கரும்பை வெட்டி சர்க்கரை ஆலைகளுக்கு அனுப்ப விவசாயிகளுக்கு ஆளை நிர்வாகம் விவசாயிகளுக்கு பழைய கிரைய தொகையான 3, 290.50 மட்டுமே தான் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை வழங்கி வருகிறது வலியுறுத்தப்பட்டது.
மேலும் கரும்பு டன் கொண்டு இருக்கு நான்காயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்து ஒன்பது மாதங்கள் ஆகியும் இதுவரை வழங்கப்படவில்லை என்பது வேதனையின் உச்சம் என்றும் இது தமிழக கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஏமாற்றமே என்பது மட்டும் நிதர்சனமான உண்மை என ஆர்ப்பாட்டத்தின் போது குற்றம் சாட்டப்பட்டது. தமிழக அரசின் இந்த செயலை கண்டித்து உடனடியாக கரும்பு டன் ஒன்று இருக்கு கொள்முதல் விலையாக நான்காயிரம் ரூபாய் வழங்கி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட வேண்டும் என் மனம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இந்தப் போராட்டம் குறித்து நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி செய்தியாளர்களிடம் கூறுகையில்,
நாராயணசாமி நாயுடு அவர்களின் தமிழக விவசாயிகள் சங்கத்துடன் பல்வேறு விவசாய சங்கங்கள் ஆதரவில் உள்ளதாகவும் தங்களிடம் 60 சதவிகித வாக்குகள் உள்ளதாகவும், ஏற்கனவே விவசாயிகளின் பாதுகாவலன் விவசாயிகளை நண்பன் என்று பல்வேறு ஆசை வார்த்தைகளை கூறி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு தற்பொழுது வரை நிறைவேற்றி தராத தமிழக அரசை நடைபெற உள்ள 2026 சட்டமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சி வரிசையில் கூட அமர வைக்க முடியாமல் தமிழக விவசாயிகள் சங்கம் விரட்டியடிக்கும் என்றும் கடுமையான எச்சரிக்கையை பதிவிட்டார். முன்னதாக நாமக்கல் மாவட்டம் மோகனூர் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்பு விநியோகஸ்தி வரும் விவசாயிகள் பெரும் திரளானோர் கையில் கரும்புகளுடன் ஊர்வலமாக வந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் ஆதரவாக உள்ள பல்வேறு விவசாய சங்க நிர்வாகிகளான பாலசுப்பிரமணியம் தங்கராஜ் ஜெயராஜ் குப்பண்ண முத்து நந்தகுமார் முத்துலட்சுமி மற்றும் பெரியசாமி உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.



0 coment rios: