சேலம்.
S.K. சுரேஷ் பாபு.
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு 200கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு பொங்கல் தொகுப்புடன் பண்டிகை தொகையாக வழங்கி மகிழ்ந்த ராகுல் இளைஞர்கள் மற்றும் அனைத்து தற்காப்பு கலைத்துறை நிர்வாகிகள்.
தமிழர் திருநாளாம் பொங்கல் திருவிழா வரும் 14ஆம் தேதி போகையுடன் தொடர்ந்து நான்கு நாட்களுக்கு தமிழகத்தில் நகர்ப்புறம் உட்பட கிராமப்புறங்களிலும் வெகு உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில், தேசிய பொதுச் செயலாளர் செல்வகுமார் மற்றும் வயநாடு நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா காந்தி ஆகியோரது பிறந்த நாள் ஆகியவற்றை கொண்டாடும் விதமாக சேலத்தில் ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. பொங்கல் பரிசு தொகுப்பாக தமிழக அரசு 3 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்துடன் ஒரு கிலோ பச்சை அரிசி ஒரு கிலோ சர்க்கரை வேஷ்டி சேலை கரும்பு ஆகியவற்றை வழங்கி மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியது என்பது தமிழக மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது என்பது யாராலும் மறுக்க முடியாது.
இந்த நிலையில் ராகுல் இளைஞர்கள் மற்றும் அனைத்து தற்காப்பு கலை துறை சார்பில் ஏழை எளியவர்களுக்கு அரிசி பருப்பு சர்க்கரை வேட்டி சேலை விளையாட்டு உபகரணங்கள் மற்றும் பண்டிகை காண ஊக்கத்தொகை வழங்கி கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியின் ஒரு பகுதி நிர்வாகிகள் சேலத்தில் தங்களது முத்திரையை பதித்துள்ளனர். சேலம் முழு வாலி கேட் பகுதியில் உள்ள சாந்தாஸ்ரமம் பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு ராகுல் இளைஞர்கள் மற்றும் அனைத்து தற்காப்பு கலை துறையின் தேசிய தலைவர் விஜயலட்சுமணன் தலைமை தாங்க, நிர்வாகிகள் குலாப் ஜான் சுப்பிரமணி யுவராஜ் சிவக்குமார் ஸ்ரீனிவாஸ் பகத் தினேஷ் தில்லை டோர் முன்னிலை வகித்தார் இந்த நிகழ்வில், சுமார் 200க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு அரிசி பருப்பு, சர்க்கரை விழா வெட்டி சேலை உள்ளிட்ட தொகுப்புகளுடன், சம்பந்தப்பட்ட குடும்பத்தில் உள்ள இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரங்களுடன் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தாருக்கு தமிழர் திருநாளாம் பொங்கல் திருவிழா உதவி தொகையாக ஒவ்வொருவருக்கும் 300 ரூபாய் வழங்கி தமிழக அரசுக்கு அடுத்தபடியாக தங்களது முத்திரையை சேலத்தில் பதித்துள்ளனர் என்பது நிதர்சனம்.



0 coment rios: