சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலத்தில் சமத்துவ மகிழ்ச்சி பொங்கல் விழா... பள்ளி குழந்தைகளுக்கு கண் கவர் கலை நிகழ்ச்சிகள் நடத்தி அவர்களுக்கு உற்சாக பரிசு அளித்து மகிழ்ந்த சேலம் வரலாற்றுச் சங்கத்தினர்.
சேலம் வரலாற்றுச் சங்கம் மற்றும் அறம் செய்யும் சேலம் மக்கள் குழு ஆகியவை இணைந்து சமத்துவ மகிழ்ச்சி பொங்கல் விழாவினை நடத்தியது. சேலம் வரலாற்று சங்கத்தின் தலைவர் இமானுவேல் ஜெ. ஜெயசிங் தலைமையில் நடைபெற்ற விழாவில், பொருளாளர் ஞானதாஸ் வரவேற்புரை நிகழ்த்தினார். சேலம் அஸ்தம்பட்டி சி.எஸ்.ஐ பாலர் ஞான இல்லத்தில் நடைபெற்ற விழாவில், செயல் தலைவர் தாரை. குமரவேலு, பொதுச் செயலாளர் பர்ணபாஸ் மற்றும் அமைப்புச் செயலாளர் பாலாஜி.வீரப்பன் மற்றும் அறம் செய்யும் மக்கள் குழுவைச் சேர்ந்த கோகுலகண்ணன் உள்ளிட்டோர் தமிழர் திருநாளாம் தைத்திருவிழா வாழ்த்துரை வழங்கினர்.
தொடர்ந்து நடைபெற்ற விழாவில், புதுப் பானையில் பொங்கலிட்டு இயற்கைக்கு வழிபாடு நடத்தப்பட்டதை அடுத்து பள்ளி மாணவ மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் அரிமா சங்க நிர்வாகிகள் பலரும் பங்கேற்று அவர்களுக்கு பல்வேறு ஊக்கு பரிசுகள் உட்பட நலத்திட்ட உதவிகளும் அரங்கேறியது. விழாவிற்கான ஏற்பாடுகளை சேலம் வரலாற்றுச் சங்கம், அறம் செய்யும் சேலம் மக்களுக்கு குழு மற்றும் அறம் ரத்த தான குழுவினர் ஆகியோர் மிகவும் சிறப்பாக செய்திருந்தனர்.



0 coment rios: