சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் சேலம் சிறுமலர் பள்ளி மாணவர்கள் சாதனை.
சேலம் சிறுமலர் பள்ளி மாணவர்கள் மாநில அளவில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் பதக்கங்கள் வென்று சாதனை படைத்தனர். மாணவன் பரிதி எழிலழகன் 14 வயதிற்கு உட்பட்ட 42, 44 ஆகிய எடை பிரிவுகளில் வெள்ளிப் பதக்கங்களையும், இதே போல மாணவன் யோக ரட்சக சித்தார்த்தன் 46, 48 ஆகிய இடை பிரிவுகளில் வெண்கல பதக்கமும் பெற்றனர். சாதனை படைத்த மாணவர்களுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜோதி பெர்னாண்டோ பதக்கங்கள் அணிவித்து சான்றிதழ்களை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
மேலும் உதவி தலைமை ஆசிரியர் டேவிட், உடற்கல்வி ஆசிரியர் சுவாமிநாதன், அல்போன்ஸ், அந்தோணி ராஜ் மற்றும் உடற்கல்வி இயக்குனர் ராபர்ட் உட்பட ஆசிரிய பெருமக்கள் சக மாணவர்கள் சாதனை மாணவர்களுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.



0 coment rios: