சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலம் வரலாற்றுச் சங்கத்தின் சார்பில் தேச தியாகிகளின் தினம் அனுசரிப்பு. அசோகர் ஸ்தூபி மற்றும் மகாத்மாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.
இந்திய திருநாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்டு பல்வேறு போராட்டங்களை நடத்தி இந்திய விடுதலைக்காக தன் இன்னுயிரையும் நீத்தவர்களை நினைவு கூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 30 ஆம் தேதி தேசிய அளவில் தியாகிகள் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தியாகிகள் தினமான இன்று சேலம் வரலாற்றுச் சங்கம் சார்பில் தியாகிகள் தினம் ( Martyrs Day ) அனுசரிக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக சேலம் மாநகர மத்தியில், சேலம் ஆட்சியரகம் எதிரில் அமைந்துள்ள இந்திய சுதந்திரப் போரில் உயிர்நீத்த தியாகிகள் ஞாபகச் சின்னமான அசோகர் ஸ்தூபிக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து, மலரஞ்சலியும், வீரவணக்கமும், செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, சேலம் பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள மஹாத்மா காந்தி திருவுருவ சிலைக்கும், மலரஞ்சலியும், வீர வணக்கமும் செலுத்தப்பட்டன.
இந்த நிகழ்வுகளுக்கு, சேலம் வரலாற்று சங்கத்தின் தலைவர் இமானுவேல் ஜெ. ஜெயசிங் தலைமையில் நடைபெற்ற விழாவில், பொருளாளர் ஞானதாஸ், செயல் தலைவர் தாரை. குமரவேலு, பொதுச் செயலாளர் பர்ணபாஸ் மற்றும் அமைப்புச் செயலாளர் பாலாஜி.வீரப்பன் மற்றும் ஜென்னிஸ் அறக்கட்டளையின் தலைவர் திருமதி கரோலின் எபி உள்ளிட்ட ஒரு கலந்து கொண்டு இந்திய தேசத்திற்காக பாடுபட்ட தியாகிகளின் அர்ப்பணிப்பை நினைவு கூறினர். இந்த நிகழ்வுகளில் செயற்குழு உறுப்பினர் பாபு, ஷானவாஸ்கான், மற்றும் உறுப்பினர்கள் மகாதேவன், அயூப், மோகன்ராஜ், வருணதேவன், இராஜேந்திரன், பிரகாஷ், ரூபன் சீனிவாசன், மணிகண்டன் உள்ளிட்டோர் மிகுந்த ஆர்வமுடன் பங்கேற்றனர்.



0 coment rios: