சேலம்.
S.K. சுரேஷ் பாபு.
சேலம் சாரதா கல்லூரியில் 500க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு தமிழக அரசின் மடி கணணிகளை வழங்கிய சுற்றுலாத் துறை அமைச்சர்.
தமிழக அரசு சார்பில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக சேலம் சாரதா மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் விழா நடந்தது. நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் கோமதி வரவேற்று பேசினார். மாவட்ட வருவாய் அதிகாரி ரவிக்குமார் தலைமை தாங்கி பேசினார். சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கி சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது. கடந்த ஐந்து ஆண்டுகளில் பள்ளி கல்வித்துறைக்கு 2 லட்சம் கோடி நிதி ஒதுக்கி சிறந்த கல்வியை தமிழக முதல்வர் அளித்து வருகிறார்.
இந்தியாவில் தமிழகம் கல்வியில் சிறந்து விளங்குகிறது. புதுமைப்பெண் திட்டத்தில் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. பெண்கள் கல்வியில் முன்னேற புதுமைப்பெண் திட்டத்தை முதல்வர் செயல்படுத்தி வருகிறார்.
மாணவர்களுக்கு தமிழ் புதல்வன் திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறார். காலை உணவு திட்டத்தின் ன் மூலம் 20 லட்சம் மாணவ மாணவிகள் பயன்பெறுகிறார்கள். 10 லட்சம் மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது. இன்று இந்த கல்லூரியில் 524 மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது. இதனை மாணவிகள் பயன்படுத்தி வாழ்க்கையில் வெற்றி அடைய மனதார வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் சாரதா கல்வி அறக்கட்டளை இயக்குனர் யதிதீஸ்வரி விநாயக பிரியா அம்பா, செயலாளர் யதீஸ்ஸ்வரி சுகப்பிரியா அம்பா மற்றும் யதீஸ்வரி அம்பாக்கள், துணை மேயர் சாரதா தேவி, மண்டல குழு தலைவர் உமாராணி உள்பட பங்கேற்றனர். முடிவில் கல்லூரி மடிக்கணினி திட்ட அலுவலர் செல்வ லட்சுமி நன்றி கூறினார்.
நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள் துறை தலைவர்கள் மாணவிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



0 coment rios: