S.K. சுரேஷ்பாபு.
உள்நாட்டு வேளாண் கட்டமைப்புகளுக்கும் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்குடன் மத்திய அரசு போதிய நிதியை கூடுதலாக ஒதுக்கீடு செய்ய வேண்டும். உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் மாநிலத் தலைவர் வேலுச்சாமி அறிக்கையின் வாயிலாக வலியுறுத்தல்.
உழவர் பெருந்தகை நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி மத்திய அரசை வலியுறுத்தும் வகையில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் மத்திய அரசின் 2026-2027 ஆம் ஆண்டிற்கு உண்டான நிதிநிலை அறிக்கை சமீபத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், ஏற்கனவே மத்திய அரசிடம் அமெரிக்க அரசாங்கம் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் செய்வதற்கு பலமுறை முயற்சித்த போது, உள்நாட்டு உணவு தானியம் வேளாண் சார்ந்த பொருட்கள் இறக்குமதி செய்ய ஒருபோதும் இந்திய அரசு அனுமதிக்காது, உள்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரம் தான் எனக்கு முக்கியம் என்று தெரிவித்தும், எனது தனிப்பட்ட நட்பு முறையில் எவ்வளவு நெருக்கடி நிலை வந்தாலும் எதிர்கொள்ள நான் தயார், உள்நாட்டின் வேளாண் கட்டமைப்புகளுக்கும் உற்பத்தியை அதிகரிக்கவும் எவ்வளவு நிதி வேண்டுமானாலும் மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய தயார் என்று
அமெரிக்க அரசாங்கத்துக்கு கணத்த குரலோடு படிலடி கொடுத்த மாண்புமிகு இந்திய பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சமீபத்தில் மத்திய அரசு தாக்கல் செய்யவுள்ள நிதிநிலை அறிக்கையில் இந்திய விவசாயிகள் நலன் கருதி விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையான MSP-யை அமல்படுத்தியும் நாடுமுழுவதும் உள்ள விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகள் மத்திய அரசிடம் வைத்ததை நிறைவேற்றும் வகையிலும் உள்நாட்டு வேளாண் கட்டமைப்புகளுக்கு உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கத்துடன் போதிய நிதியை மத்திய அரசு கூடுதலாக ஒதிக்கீடு செய்ய வேண்டும் என உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் மத்திய அரசை இந்த அறிக்கையின் வாயிலாக வலியுறுத்துகிறது என்றும் அறிக்கையின் வாயிலாக தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.



0 coment rios: