சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
அருந்ததியர் மக்கள் வாழ்வில் வளர்ச்சி பெற தமிழக முதல்வர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாக, சேலம் ஓமலூரில் அமைச்சர் எ.வ. வேலு பெருமிதம்.
இந்திய விடுதலை சுதந்திர போராட்ட மாவீரன் பொல்லான் அவர்களுக்கு திருவுருவ சிலையுடன் கூடிய நினைவகம் அமைத்துக் கொடுத்த தமிழக முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் ஆதித்தமிழர் பேரவை மற்றும் அருந்ததியர் மக்கள் சார்பில் நடைபெற்றது. சேலம் மாவட்டம் ஓமலூரில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு ஆதித்தமிழர் பேரவையின் நிறுவனர் அதியமான் தலைமை தாங்கினார். ஆதித்தமிழர் பேரவையின் மாநில துணை பொது செயலாளர் ஏ.டி.ஆர்.சந்திரன் வரவேற்புரை நிகழ்த்த, மாநில மகளிர் அணி துணை செயலாளர் மகேஸ்வரி, தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைச்செயலாளர் யுவராஜ் மற்றும் வடக்கு மாவட்ட செயலாளர் ஏசுராஜ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்த நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டத்தில் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வழக்கறிஞர் ராஜேந்திரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பொதுக்கூட்டத்தை சிறப்பித்தனர்.
தொடர்ந்து நடைபெற்ற நன்றி அறிவிப்பு பொது கூட்டத்தில் பேசிய அமைச்சர் பெருமக்கள், இந்திய விடுதலை போராட்ட மாவீரன் கொல்லானின் வீர வீரன் குறித்து பட்டியலிட்டு பேசி அவர்கள் அவரை பெருமைப்படுத்தும் விதமாக திருஉருவச் சிலையுடன் கூடிய நினைவகம் அமைத்துக் கொடுத்து தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் சிறப்பு செய்துள்ளார் என்றும் குறிப்பிட்டனர். தமிழக மக்களின் நலன் கருதி அடித்தட்டு மக்களும் வாழ்வில் முன்னேற்றம் அடைய தமிழக அரசு செயல்படுத்திய திட்டங்கள் குறித்தும் பட்டியல் இட்ட அவர்கள் அருந்ததியர் மக்களுக்கு என்றும் உறுதுணையாக இருப்பது திமுக தான் என்றும் அவர்களுக்கு மூன்று சதவிகித இட ஒதுக்கீடு வழங்கி அவர்கள் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்ற முதல்வர் பல்வேறு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருவது காரணம் என்றும் பெருமைப்பட தெரிவித்தனர்.
இந்த நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டத்தில் ஆதித்தமிழர் பேரவை மாவட்டத் தலைவர் மாரியப்பன் உட்பட மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.



0 coment rios: