வியாழன், 5 பிப்ரவரி, 2026

உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு அவர்களின் 101 வது பிறந்தநாள் விழா. நாளை கோவை அன்னூர் அருகே உள்ள அவரது மணி மண்டபத்தில் நடைபெறும் மரியாதை செய்யும் நிகழ்விற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் பங்கேற்க வேண்டும். உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் வேலுச்சாமி அறிக்கையின் வாயிலாக அழைப்பு...

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

தமிழக விவசாயிகள் சங்கத்தின் தலைவர் வேலுச்சாமி வெளியிட்டுள்ள அழைப்பு அறிகையில்,
தமிழக விவசாயிகளுக்கு பயிர் கடன் ஜப்தியில் இருந்து விடுதலை மற்றும் விவசாயிகள் தினந்தோறும் விவசாயத்திற்கு உபயோகப்படுத்தும் கிணற்று மோட்டாருக்கு இலவச மின்சாரம் ஆகியவற்றை தமிழ்நாடு அரசிடம் 1970 முதல் 1980 வரை தமிழக விவசாயிகள் சங்கம்  மூலம் உச்சக்கட்ட போராட்டம் நடத்தி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் விவசாயிகள் நலனுக்காக தமிழக விவசாயிகள் சங்கத்தை உருவாக்கி தோற்றுவித்த மறைந்த உழவர் பெருந்தலைவர் C.நாராயணசாமி நாயுடு அவர்களின் 101 வது பிறந்தநாள் நாள் வருகின்ற பிப்ரவரி 6 ந் தேதி, அதனை முன்னிட்டு நாளை கோவை மாவட்டம் அன்னூர் வட்டம் கோயில்பாளையம் அருகே உள்ள வையம்பாளையம் கிராமத்தில் உள்ள அன்னாரது மணிமண்டபத்தில் அன்று காலை 10.30 மணிக்கு மறைந்த உழவர் பெருந்தலைவர் C.நாராயணசாமி அவர்களின் திருவுருவச்சிலைக்கு உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் திரு.R.வேலுசாமி அவர்கள் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப் படவுள்ளது.
ஆகையால் தமிழகத்தில் உள்ள விவசாயிகள் அனைவரும் மறைந்த உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு அவர்களுக்கு மாலை அணிவித்து புகழ் சேர்க்கும் வகையில் மரியாதை செலுத்த வருகை தரும்படி அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன். என்று சங்கத்தின் தலைவர் வேலுச்சாமி அழைப்பு விடுத்துள்ளார்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: