சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
உழவர் பெருந்தகை நாராயணசாமி நாயுடு அவர்களின் 101 வது பிறந்தநாள் விழா. கோவை வையம்பாளையத்தில் உள்ள அவரது மணிமண்டபத்தில் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி மாலை அணிவித்தும், மலர் வளையம் வைத்தும் மரியாதை.
தமிழக விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் பயிர் கடன் மற்றும் பண்ணை அபிவிருத்தி கடன் பெற்றுள்ளதில் இருந்து ஜப்தியில் விடுதலை மற்றும் விவசாயிகள் தினந்தோறும் விவசாயத்திற்கு உபயோகப்படுத்தும் கிணற்று மோட்டாருக்கு இலவச மின்சாரம் பெறுவதற்காக தமிழ்நாடு அரசிடம் 1970 முதல் 1980 வரை தமிழக விவசாயிகள் சங்கம் மூலம் தமிழக விவசாயிகளை மிகப்பெரிய அளவில் ஒன்று திரட்டி உச்சக்கட்ட போராட்டம் நடத்தி விவசாயிகளின் உரிமைக்காகவும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் விவசாயிகள் நலனுக்காக தமிழக விவசாயிகள் சங்கத்தை உருவாக்கி தோற்றுவித்த மறைந்த உழவர் பெருந்தலைவர் C.நாராயணசாமி நாயுடு அவர்களின் 101 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கோவை மாவட்டம் அன்னூர் வட்டம் கோயில்பாளையம் அருகே உள்ள வையம்பாளையம் கிராமத்தில் உள்ள உழவர் பெருந்தகையின் மணிமண்டபத்தில், மறைந்த உழவர் பெருந்தலைவர் C.நாராயணசாமி அவர்களின் திருவுருவச்சிலைக்கு உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் திரு.R.வேலுசாமி அவர்கள் தலைமையில் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப் பட்டது. தொடர்ந்து அவரது சமாதியில் மலர் வளையம் வைத்தும் மலர் தூவையும் மரியாதை செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாநில பொருளாளர் திரு.A.மோகன் குமார், மாநில துணைத் தலைவர் திரு K.ராஜாபெருமாள், மாநில துணை பொதுச்செயலாளர் திரு.G.P.A.கணபதி, சேலம் மாவட்டத் தலைவர் திரு.E.S.M.ஏழுமலை மற்றும் மாநில ,மாவட்ட நிர்வாகிகள் மற்றும் விவசாயிகளும் கலந்து கொண்டு மறைந்த உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு அவர்களுக்கு புகழ் சேர்க்கும் வகையில் மரியாதை செலுத்தப்பட்டது.



0 coment rios: