சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலம் கணேஷ் பொறியியல் கல்லூரியில் 15 வது ஆண்டு விழா கொண்டாட்டம். RAZZMATZZ 2026 என்ற தலைப்பில் கல்லூரி மாணவ மாணவிகளின் கண் கவர் கலை நிகழ்ச்சிகள்.
சேலம் அம்மாபேட்டை கணேஷ் பொறியியர் கல்லூரியில் 15 நமது ஆண்டு விழா கொண்டாட்டம் வெகு உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. கல்லூரியின் தாளாளர் தங்கவேல் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் கல்லூரியில் செயலர் விஜய கணேஷ் பொருளாளர் செந்தில்குமார் மற்றும் முதல்வர் முனைவர் சுபாஷ் சந்திர போஸ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
கல்லூரி மாணவ மாணவிகளுக்கு என RAZZMATZZ RAZZMATZZ 2026 என்ற பெயரில் நடைபெற்ற இந்த ஆண்டு விழா கொண்டாட்டத்தில் கல்லூரி மாணவ மாணவிகளின் தனி திறமைகளை மேம்படுத்தும் விதமாக தனிநபர் நடனம் குழு நடனம் பரதநாட்டியம் குரு நாடகம் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் வெகு சிறப்பாக நடைபெற்றது. மேலும் பல்கலைக்கழக அளவில் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து அவர்களின் பத்திரிக்கையாளர்கள் உடனான சந்திப்பு நிகழ்வும் அரங்கேறியது. இந்த ஆண்டு விழா கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட மாணவ மாணவிகள் அனைவரும் லேசர் லைட் மின் ஒளி மற்றும் பிரத்தியேக ஒலி அமைப்புகளுடன் நீக்கப்பட்டு இருந்த பிரம்மாண்ட மேடையில் தங்களது முழு திறமைகளையும் வெளிப்படுத்தி அரங்கையே அதிர வைத்தனர் என்பது மட்டும் நிதர்சனம். இந்த விழாவில் கல்லூரியில் துறை தலைவர்கள் பேராசிரியர்கள் மாணாக்கர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.



0 coment rios: