சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலத்தில் ஜியா பிரியாணி மல்டிகுஷன் ரெஸ்டாரன்டின் புதிய கிளை திறப்பு விழா..
சேலம் பேர்லேண்ட்ஸ் கிரீன்வேஸ் ரோட்டில் புதிதாக அமைந்துள்ள “ஜியா பிரியாணி” அசைவ ஹோட்டலின் புதிய கிளை திறப்பு விழா மிகுந்த உற்சாகத்துடன் நடைபெற்றது. இவ்விழாவில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஜியா பிரியாணி குழுமத்தின் உரிமையாளர்கள், குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மற்றும் முக்கிய அழைப்பாளர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். அசைவ உணவு பிரியர்கள் குடும்பத்துடன் அமைதியாகவும் வசதியாகவும் அமர்ந்து உணவருந்தும் வகையில், இந்த ஹோட்டல் விசாலமான இருக்கை வசதிகள், சுத்தமான சமையல் அறை மற்றும் தரமான சேவைகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. திறப்பு விழா நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, ஸ்ரீவாரி கன்ஸ்ட்ரக்சன் நிறுவனத்தின் உரிமையாளர் கௌதமன் அவர்கள் முதல் விற்பனையை துவக்கி வைத்தார். இந்த புதிய கிளை மூலம், தரமான சுவையும், வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையும் வழங்கப்படும் என நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
மேலும், புதிய கிளை திறப்பை முன்னிட்டு வாடிக்கையாளர்களை கவரும் வகையில் சிறப்பு சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பிப்ரவரி 6 முதல் பிப்ரவரி 8 வரை ஒரு மட்டன் பிரியாணி வாங்கினால், ஒரு சிக்கன் பிரியாணி இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.



0 coment rios: