திங்கள், 9 பிப்ரவரி, 2026

பல கோடி ரூபாய் ஊழல் மோசடி செய்துள்ள சன் சைன் ப்ரமோட்டர்ஸ் நிறுவன உரிமையாளர்களை கைது செய்து அந்த நிறுவனம் சேலத்தில் இயங்க தடை விதிக்க வேண்டும். தேசிய ஒடுக்கபட்ட மக்கள் குடியரசு நிறுவன தலைவர் சரஸ்ராம் ரவி ஆட்சியருக்கு வலியுறுத்தல்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

பல கோடி ரூபாய் ஊழல் மோசடி செய்துள்ள சன் சைன் ப்ரமோட்டர்ஸ் நிறுவன உரிமையாளர்களை கைது செய்து அந்த நிறுவனம் சேலத்தில் இயங்க தடை விதிக்க வேண்டும். தேசிய ஒடுக்கபட்ட மக்கள் குடியரசு நிறுவன தலைவர் சரஸ்ராம் ரவி ஆட்சியருக்கு வலியுறுத்தல். 

இதுகுறித்து அவர் கூறியதாவது, சேலம் மாநகரில் கடந்த பல ஆண்டுகளாக சன் சைன் புரமோட்டர்ஸ் ( Sun Shine Promotors  )  என்கிற பெயரில்  பல நூறு அப்பாவி பொது மக்களை ( சேலம் - நாமக்கல் - தர்ம்புரி ) ஏமாற்றி  நில மோசடி மற்றும்  பல கோடி ரூபாய் பண மோசடி செய்து  வரும் அந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள. சரன்யா, கவிதா, சுகுமார், குமார் ஆகியோரை கைது செய்ய வேண்டும். தொடர்ந்து அந்த மோசடி  நில ஊழல் நிறுவனம் சேலம் மாநகர், சேலம் முல்லை நகரில் இயங்க தடை விதிக்க வேண்டும். 
மேலும் சேலம் சூரமஙலகலம் காவல் திலையத்தில் சம்பந்தப்பட்ட நிறுவன உரிமையாளர்கள்  மீது குவிந்துள்ள பல நில மற்றும் பண மோசடி புகார் மனுக்கள் மீது வழக்கு பதிவு செய்ய சேலம் மாவட்ட ஆட்சியர் மற்றும் சேலம் மாநகர காவல் ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். அது மட்டுமல்லாமல், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீதும் நில மற்றும் பண மோசடி செய்த உரிமையாளர்களை கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் வரும் 13ஆம் தேதி, சூரமங்கலம் தபால் நிலையம் முன்பாக நடத்த அனுமதி வழங்கிட கோரி சேலம் சூரமங்கலம் காவல் நிலையத்தில் அனுமதி மனு  அளிக்கபட உள்ளதாகவும் தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசு நிறுவன தலைவர் சரஸ்ராம் ரவி தெரிவித்துள்ளார்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: