சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலம் கோட்டை அண்ணா நகரில் மாற்றுக் கட்சியை சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வழக்கறிஞர் இரா. இராஜேந்திரன் முன்னிலையில் திமுகவில் இணைந்த விழா.
சேலம் மத்திய மாவட்ட திமுகவின் முப்பத்தி ஒன்னாவது கோட்ட இளைஞர் அணி சார்பில் இளைஞர்கள் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. சேலம் கோட்டை பகுதியைச் சார்ந்த ஷபி பூங்கொத்து கொடுத்து சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளர் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சருமான வழக்கறிஞர் இரா இராஜேந்திரன் முன்னிலையில் தன்னை முழுமையாக திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொண்டார்.
தொடர்ந்து கோட்டை ஷபி மற்றும் 31வது கோட்ட திமுக செயலாளர் இப்ராஹிம் ஆகியுறது ஏற்பாட்டின் பேரில் அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியில் இருந்து விலகிய நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் அமைச்சர் முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர். அவர்களுக்கு சுற்றுலாத் துறை அமைச்சர் கட்சி துண்டுகளை அணிவித்து வாழ்த்தி வரவேற்று வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
முன்னதாக விழாவிற்கு வந்திருந்த சுற்றுலாத்துறை அமைச்சருக்கு புலி வேடமிட்ட இஸ்லாமிய இளைஞர்களால் உற்சாக நடனம் ஆடி வரவேற்றதோடு மட்டுமல்லாமல் அவருக்கு மாலை அணிவித்தும் மரியாதை செய்யப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோட்டை ஷபி மற்றும் இப்ராஹிம் உள்ளிட்டோர் சிறப்பாக செய்திருந்தனர்.



0 coment rios: