செவ்வாய், 17 பிப்ரவரி, 2026

2026 சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகளிடம் பேசி வாக்குறுதிகளை பெற வேண்டும். நடைபெற உள்ள மகாசபை கூட்டத்தில், மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் தவறாமல் பங்கேற்க வேண்டும். தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி அழைப்பு.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

2026 சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகளிடம் பேசி வாக்குறுதிகளை பெற வேண்டும். நடைபெற உள்ள மகாசபை கூட்டத்தில், மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் தவறாமல் பங்கேற்க வேண்டும். தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி அழைப்பு. 

இது குறித்து தமிழக விவசாயிகள் சங்கம் மாநில தலைவர் வேலுச்சாமி அழைப்பு விடுப்பில்,
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள தோக்கவாடி சந்தோஷ மஹாலில், வரும் 27.2.2026 வெள்ளிக்கிழமை அன்று, உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கத்தின் மகாசபை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் தமிழக விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கைகளை 2026 இல் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகளிடம் வலியுறுத்தி தேர்தல் வாக்குறுதிகளை பெறுவது சம்பந்தமாகவும், நமது சங்கத்தின் வளர்ச்சி பணிகள் குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வேண்டி உள்ளது. எனவே தனது தலைமையில் நடைபெற உள்ள மகாசபை கூட்டத்திற்கு, தமிழகத்தில் உள்ள மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் விவசாயிகள் அனைவரும் கூட்டத்திற்கு  தவறாமல் பங்கேற்க வருகை தரும்படி அனைவரையும் அன்புடன் அழைக்கின்றேன் என்று அழைப்பு படிவத்தில் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி குறிப்பிட்டுள்ளார்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: