சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலம் அரசு மருத்துவமனையில் உயிரிழந்து கடந்து 6 நாட்களாக யாருமே உரிமை கோராத முதியவரின் சடலத்தை மீட்டு நல்லடக்கம் செய்த மாமன்ற உறுப்பினர் தெய்வா.
சேலம் பொன்னம்மாபேட்டை முத்துமாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் தெய்வலிங்கம். வழக்கறிஞர் ஆன இவர் தெய்வா என்று அறக்கட்டளையை உருவாக்கி நாள்தோறும் 200க்கும் மேற்பட்ட முதியவர்கள் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு காலை சிற்றுண்டிகளை வழங்கி சேலத்தில் தனக்கென்று ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ள அவர் தான் தெய்வா. அதுமட்டுமில்லாமல் சமூக மற்றும் பொதுநல சேவையில் அதீத ஆர்வம் கொண்ட இவர் தனது சொந்த செலவில் அமரர் உறுதியை வைத்துக்கொண்டு அனாதையாக உயிரிழப்பவர்களை மீட்டு நல்லடக்கம் செய்வதையும் தனது தலையாய கடமையாக செய்து வருகிறார்.
அந்த வகையில், சேலம்
அம்மாபேட்டை TVK நகர் பகுதியை சார்ந்த 80 வயது காசிலிங்கம் என்பவர் கடந்த 10.2. 2026 அன்று இயற்க்கை மரணம் அடைந்தார். இவரது உடல் சேலம் அரசு மருத்துவமனையில் இருந்தது. கடந்த 6 நாட்களாக யாரும் உரிமை கோராததால் இன்று ஒளி அறக்கட்டளை உடன் சேர்ந்து சேலம் பெரமனூர் அருகே உள்ள TVS மயானத்தில் நல்லடக்கம் செய்த மாமன்ற உறுப்பினர் தெய்வலிங்கத்தின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளதோடு இவருக்கு நிகர் இவரை என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார் தன்னலன் பாராமல் பிறர் நலனுக்காகவே தனது வாழ்வை அர்ப்பணித்து உள்ள தெய்வா....



0 coment rios: