வியாழன், 26 மார்ச், 2026

தமிழகத்தில் நடைபெற இருக்கின்ற சட்டமன்ற தேர்தலில் 100% வாக்குப்பதிவு நடைபெற வலியுறுத்தி கிராம மக்களிடையே துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்திய அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

தமிழகத்தில் நடைபெற இருக்கின்ற சட்டமன்ற தேர்தலில் 100% வாக்குப்பதிவு நடைபெற வலியுறுத்தி கிராம மக்களிடையே துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்திய அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர். 

2026 சட்டமன்றத் தேர்தலை ஒட்டி சேலம் மாவட்ட நிர்வாகமும் ஒவ்வொரு ஊராட்சி பஞ்சாயத்து நிர்வாகங்கள் சார்பில் அவ்வப்போது தேர்தல் தொடர்பான பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. 
அதன் ஒரு பகுதியாக சேலம் வீரபாண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட முருங்கப்பட்டி அரசு தொடக்க பள்ளியில்
கிராம நிர்வாக அலுவலர் 
திருமதி.  சண்முகப்பிரியா மற்றும் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் சரவணன் 
மற்றும் ஆசிரிய பெருமக்கள் 
கண்ணகி, ஜெயலட்சுமி, சரஸ்வதி,
கவிதா மற்றும்
பூபாலன் ஆகியோரது முன்னிலையில், பள்ளி 
மாணவர்கள் நடைபெறவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலில், அனைவரும் இணைந்து
தேர்தலில் அனைத்து குடிமக்களும் 100%
வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி
விழிப்புணர்வு பேரணி மேற்கொள்ளப்பட்டது. 
மேலும் முருங்கபட்டி  பேருந்து பயணிகள், 
பாதசாரிகள் மற்றும் பொது மக்களுக்கு
வாக்களிப்பதன் அவசியம் என்பது குறித்து துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டன. அரசு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர், ஆசிரிய பெருமக்கள் மற்றும் மாணாக்கர்களின் இந்த விழிப்புணர்வு அந்தப் பகுதி மக்களிடையே மிகுந்த வரவேற்பினையும் பாராட்டுதலையும் பெற்றது என்பது மட்டும் நிதர்சனம்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: