சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
திமுக கூட்டணிக்கு முழு ஆதரவு. தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் கூட்டமைப்பு நிறுவனர் Dr. நாகா. அரவிந்தன்.
2026 சட்டமன்றத்திற்கான தேர்தல் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி தமிழகத்தில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக பல்வேறு கட்சிகளை இணைத்து நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி உள்ளது. இந்த நிலையில் தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் கூட்டமைப்பு மற்றும் ஆரிய வைசிய முன்னேற்ற பேரவை ஆகியவற்றின் சார்பில் ஏற்கனவே 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு என்று அதன் நிறுவன தலைவர் Dr. நாகா. அரவிந்தன் அறிவித்து இருந்த நிலையில், இது தொடர்பான அதிகாரபூர்வ கடிதங்களை திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை சந்தித்து நேரில் வழங்கி இருந்தார். இதனிடையே சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், சேலம் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் மற்றும் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சருமான வழக்கறிஞர் இராஜேந்திரனை நேற்று நேரில் சந்தித்து திமுகவிற்கான ஆதரவு கடிதத்தை தேசிய தலைவர் சிறுபான்மையினர் கூட்டமைப்பின் நிறுவனர் Dr. நாகா. அரவிந்தன் வழங்கினார். அப்போது அமைப்புகளின் நிர்வாகிகள் பலரும் உடன் இருந்தனர்.



0 coment rios: