சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலம் மேற்கு தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர்.
11 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கி சேலம் மாவட்டத்தில், திமுக கூட்டணியில் அங்கம் வகித்துள்ள தேமுதிகவிற்கு சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜ் அவர்களுக்கு ஆதரவாக, தமிழக சுற்றுலாத் துறை அமைச்சரும் சேலம் வடக்கு தொகுதி திமுக வேட்பாளருமான வழக்கறிஞர் இரா. இராஜேந்திரன், மேற்கு தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் வீதி வீதியாக நடந்தே சென்றும் திறந்தவெளி வாகனத்தில் சென்ற வாரம் திமுக தலைமையிலான தமிழக அரசின் கடந்த ஐந்தாண்டு கால சாதனைகள் குறித்த துண்டு பிரசவங்களை விநியோகித்து வாக்குகளை சேகரித்தார். இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்வின் போது சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவரும், சேலம் மாநகர துணை மேருமான திருமதி சாரதாதேவி மாணிக்கம் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலரும் உடன் இருந்தனர்.



0 coment rios: