சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலம் சோனா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஒன்பதாவது ஆண்டு விழா
சேலம் சோனா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஒன்பதாவது ஆண்டு விழா கல்லூரியின் ஶ்ரீ வள்ளியப்பா கலையரங்கக் கூடத்தில் நடைபெற்றது. பெருமைமிக்க சோனா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களின் கல்வி மற்றும் ஆராய்ச்சி சாதனைகளை வெளிப்படுத்தும் விதமாக நடைபெற்ற இந்த ஆண்டு விழாவிற்கு கல்லூரியின் துணைத் தலைவர்கள் சொக்கு வள்ளியப்பா, தியாகு வள்ளியப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரியின் தலைவர் ஶ்ரீ வள்ளியப்பா அவர்கள் தலைமையேற்று சோனா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆண்டு விழா கொண்டாட்டங்களைத் துவக்கி வைத்தார். அனைவரையும் வரவேற்ற கல்லூரியின் முதல்வர் முனைவர் கு.மை.காதர் நவாஸ் அவர்கள் மாணவர்களின் சாதனைகள் அடங்கிய படத்தொகுப்புடன் கூடிய ஆண்டறிக்கையைச் சமர்ப்பித்தார். கல்லூரியின் துறை சார்ந்த நடவடிக்கைகள் மற்றும் பேராசிரியர்களின் ஆராய்ச்சிகள் பங்களிப்பு மாணவர்களின் ஆராய்ச்சிகள், விளையாட்டுகள் மற்றும் பிற துறைகளில் சாதனைகள் என கல்லூரியின் சாதனைகளைப் பட்டியலிட்டார். பெருமைக்குரியசேகர் ( Partner Deloitte Touche Tohmatsu India LLP ) அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் .
மேலும் கல்வியில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு ரூபாய் 4,35,000 வழங்கப்பட்டது. கல்வியாண்டில் கல்வியில் முன்னிலை வகித்து படித்து முடித்து வெளியேறிய சிறந்த மாணவர்களுக்கு ரூபாய் 100000 வழங்கப்பட்டது. விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு ஒரு பருவ கட்டணமாக தலா 37,000 வீதம் ரூபாய் 2,12,000 வழங்கி கௌரவிக்கப்பட்டது. கல்லூரியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ரூபாய் 30,000 , சிறந்த நாட்டு நலப்பணி திட்டம்(NSS) இளைஞர் செஞ்சிலுவை சங்கம் (YRC) செஞ்சூருள்(RRC) மற்றும் தேசிய மாணவர் படை(NCC) மாணவர்களுக்கு ரூபாய் 11000, மாணவர்களில் சிறந்த தமிழ் மற்றும் ஆங்கில பேச்சாளர்களுக்கு ரூபாய் 10,000, தொடர்ந்து நூலகத்தை நன்முறையில் பயன்படுத்திய மாணவர்களுக்கு 2000 மதிப்புள்ள புத்தகமும் வழங்கப்பட்டது. பொருளாராதார அளவில் பின்தங்கிய மாணவர்களுக்கு நிர்வாக உதவித் தொகையாக ரூபாய் 4,35,000 மற்றும் பல்கலைக்கழக அளவில் மாணவர்களைத் தரவரிசையில் இடம்பெறச் செய்த துறைகளுக்கு ரூபாய் 300,000 வழங்கி சிறப்பித்தனர். மாணவர்களின் மருத்துவத்திற்காக ரூபாய் 35,0000 என்று ஏறத்தாழ ரூபாய் 15,00,000 கல்லூரியின் நிர்வாகத்தின் சார்பாக மாணவர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.
தமிழ்த்துறை சார்பாக எழுதப்பட்டுள்ள 'பக்தியும் தமிழும் ( சைவம்)' என்ற ஆய்வு நூலைத் தலைவர் சொ. வள்ளியப்பா அவர்கள் வெளியிட தமிழ்த்துறை தலைவர் முனைவர் க.விஜயராகவன் அவர்கள் பெற்றுக்கொண்டார். இந்த விழாவில் சோனா கல்வி நிறுவனத்தின் முதல்வர்கள் முனைவர் கனகராஜ், முனைவர் செந்தில்குமார், திருமதி .இ.ஜெ. கவிதா ,பேராசிரியர்கள் மற்றும் ஏராளமான மாணவர்கள் கலந்துக்கொண்டனர்.
உளவியல் துறைத் தலைவர் முனைவர். ஷீனா மேத்யூ அவர்கள் நன்றி உரை வழங்க விழா இனிதே நிறைவுற்றது.



0 coment rios: