வியாழன், 2 ஏப்ரல், 2026

உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் என்ற போலி பெயரில் அதிமுகவிற்கு நிபந்தனை அற்ற ஆதரவு என்ற செய்தி வெளியானது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. பத்திரிகை மற்றும் ஊடகங்களில் வெளியான செய்திக்கு கண்டனம் தெரிவித்த வேலுச்சாமி, தமிழக விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையை ஏற்கும் அரசியல் கட்சி தலைவருக்கு ஆதரவு தருவது தொடர்பான மாநில செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்து அறிவிக்கப்படும்.. தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி தகவல்.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் என்ற போலி பெயரில் அதிமுகவிற்கு நிபந்தனை அற்ற ஆதரவு என்ற செய்தி வெளியானது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. பத்திரிகை மற்றும் ஊடகங்களில் வெளியான செய்திக்கு கண்டனம் தெரிவித்த வேலுச்சாமி, தமிழக விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையை ஏற்கும் அரசியல் கட்சி தலைவருக்கு ஆதரவு தருவது தொடர்பான மாநில செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்து  அறிவிக்கப்படும்.. தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி தகவல்.

உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பரபரப்பான அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார் அதில், 
சிறப்பான முறையில் நீண்டகாலமாக வேலுச்சாமி ஆகிய தனது தலைமையில் செயல்பட்டு வருகிறது. விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் கவணத்துக்கு கொண்டு செல்லும் வகையில் பல்வேறு போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்ப்பட்டு  நல்ல முறையில் இதுநாள் வரை இயங்கி வருகிறது. வருகிற 23 ந் தேதி தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக  கூட்டணி  கட்சிக்கு நிபந்தனை அற்ற ஆதரவு தருவதாக உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கத்தில் எந்தவொரு அடிப்படை உறுப்பினரும் இல்லாத, போலியான முறையில் மாநிலத் தலைவர் என்று உருவெடுத்தது திரு.N.சிவபெருமாள் அவர்கள் தவறான முறையில் சங்கத்தின் பெயரை சீர்குலைக்கும் வகையில் பத்திரிகை மற்றும் ஊடகம் வாயிலாக  செய்தி வெளியிட்டுள்ளார். இவருக்கும் இந்த சங்கத்துக்கும் எந்த ஒரு தொடர்பும் கிடையாது. 
உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் வருகிற 23 ந் தேதி தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில், தமிழக விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையை எந்த தமிழக அரசியல் கட்சி  தலைவர்கள் ஏற்றுக் கொள்கிறார்களோ அந்த அரசியல் கட்சிகளுக்கு ஆதரவு தருவது சமந்தமாக  அடுத்த வாரம் மாநில செயற்குழு கூட்டம் கூட்டுவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது அதன் பின்னர் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு வைத்து சங்கம் யாருக்கு ஆதரவு என்ற நிலைப்பாடு குறித்து செய்தி வெளிடப்படும் போலியான முறையில் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் பெயரை பயன்படுத்தும் நபர்கள் மீது உரிய முறையில் சட்டப்பூர்வமாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதை பத்திரிகை மற்றும் ஊடகம் நிறுவனங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன். போலியான முறையில் அதிமுகாவிற்கு நிபந்தனை அற்ற ஆதரவு தருவதாக கூறி பத்திரிகை மற்றும் ஊடகங்களில் வெளியான செய்தி  தவறானது இது போன்று தவறான செய்தியை பத்திரிகை மற்றும் ஊடக நிறுவனங்கள் வெளியிடவேண்டாம் என இந்த அறிக்கையின் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன் என்று தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி அறிக்கையின் வாயிலாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: