சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அகில இந்திய மஜ்லிஸ் கட்சி 234 தொகுதிகளிலும் முழு ஆதரவு. சேலத்தில் நடைபெற்ற திமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் மாநில இணை செயலாளர் S.R. இமாம் மைதீன் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வழக்கறிஞர் இரா இராஜேந்திரனுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து.
சேலம் தெற்கு மற்றும் வடக்கு
சட்டமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர்கள் சந்திப்பு மற்றும் அறிமுக கூட்டம்.
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் அகில இந்திய மஜ்லிஸ் இ- இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சி முழு ஆதரவை தெரிவித்திருந்தது.
அதன் பேரில் AIMIM கட்சியின் மாநிலத் தலைவர் ஜனாப் டீ.ஸ்.வக்கீல் அஹமத் மற்றும்
மாநில பொதுச் செயலாளர்
ஜனாப் AM ரசூல் மொய்தீன் அவர்களின் ஆலோசனையின்படி, மஜ்லிஸ் கட்சியின் மாநில இணைச்செயலாளர் சேலம் S.R. இமாம் மைதீன் அவர்கள் தலைமையில் சேலம் மாவட்ட தலைவர் பாசில் மாவட்டச் செயலாளர் தாஜுதீன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு
சேலம் வடக்கு வெற்றி வேட்பாளர் தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் ரா ராஜேந்திரன் அவர்களையும் சேலம் தெற்கு வெற்றி வேட்பாளர் லோகநாதன் அவர்களையும் சந்தித்து கொண்டாடை போற்றி வாழ்த்துகளை தெரிவித்து வேட்பாளர் அறிமுக கூட்டத்திலும் கலந்து கொண்டு மாநில இணைச்செயலாளர் சேலம் S.R. இமாம் மைதீன் அவர்கள் உரையாற்றினர்.
மேலும் 11 சட்டமன்ற தொகுதிகளில் உள்ளடக்கிய சேலம் மாவட்டத்தில் திமுக கூட்டணி வேட்பாளர்கள் அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி அடைய அனைவரும் முழு முனையுடன் செயலாற்ற வேண்டும் என்பது மட்டுமே எனது வேண்டுகோள் என்று தனது உரையை நிறைவு செய்தார்.



0 coment rios: