வெள்ளி, 3 ஏப்ரல், 2026

வேலுச்சாமி அவர்களுக்கும் தமிழக விவசாயிகள் சங்கத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. பதிவு செய்யப்பட்ட சங்கத்திற்கு சிவபெருமாள் தான் மாநில தலைவர். உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் பழனி முருகன் திட்டவட்ட அறிவிப்பு.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

வேலுச்சாமி அவர்களுக்கும் தமிழக விவசாயிகள் சங்கத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. பதிவு செய்யப்பட்ட சங்கத்திற்கு சிவபெருமாள் தான் மாநில தலைவர். உழவர் பெருந்தலைவர்  நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் பழனி முருகன் திட்டவட்ட அறிவிப்பு. 

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தமிழகத்தில் தற்போது சூடு பிடித்துள்ள நிலையில், தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவிற்கு பல்வேறு அமைப்புகள் சங்கங்கள்  தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் சிவபெருமாள் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான NDA கூட்டணிக்கு, தமிழக முழுவதும் ஆதரவு தெரிவித்து அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். இதற்கு உழவர் பெருந்தலைவர்  நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் நாமக்கல்லை சேர்ந்த வேலுச்சாமி அறிக்கையின் வாயிலாக கடும் கண்டனம் தெரிவித்ததோடு இந்த சங்கத்திற்கும் சிவபெருமாளுக்கும் எந்த தொடர்பும் கிடையாது என்றும் இவருடைய இந்த அதிமுக கூட்டணிக்கான ஆதரவு தெரிவித்துள்ளது தொடர்பாக, விரைவில் மாநில செயற்குழு கூட்டம் நடத்தி, அதில் எந்த கட்சி தலைவருக்கு ஆதரவு என்பதை வேலுச்சாமி ஆகிய எனது தலைமையில் அறிவிக்கப்படும் என்று ஏற்கனவே குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் இதே உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் பழனி முருகன் விவசாய சங்க லெட்டர் பேடில், 
மேற்கண்ட விலாசத்தில் மற்றும் பதிவு பெற்ற எண்ணில் இயங்கி வரும் சங்கத்திற்கு N. சிவபெருமாள் அவர்கள் முறைப்படி தேர்தல் அலுவலர்களால் தேர்தல் நடைபெற்று தேர்வானவர். இது முறைப்படி சேலம் பத்திரப்பதிவு துறையில் பதிவும் செய்யப்பட்டுள்ளது. திரு வேலுச்சாமி அவர்களுக்கும் மேற்படி  சங்கத்திற்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்றும் அவர் முறைப்படி சங்கத்திலிருந்து நீக்கப்பட்டார். வரும் காலத்தில் வேலுச்சாமி அவர்கள் மேற்படி சங்கத்தின் பெயரையோ, பதிவு எண்ணையோ பயன்படுத்த எந்த உரிமையும் இல்லை. அவருடன் நமது சங்க நிர்வாகிகள் யாரும் தொடர்பில் இல்லை. மீரும் பட்சத்தில் வேலுச்சாமி அவர்கள் மீது சிவில் மற்றும் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதனை தாழ்மையுடன் அனைவருக்கும்தெரிவித்துக் கொள்கின்றேன் என்று அறிக்கையின் வாயிலாக உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் பழனி முருகன் அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை களத்தை விட தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் யார் என்பதில் எழுந்துள்ள பிரச்சனை தற்போது தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயிலிலும் கடுமையான சூட்டை கிளப்பியுள்ளது.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: