வியாழன், 2 ஏப்ரல், 2026

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான NDA கூட்டணிக்கு தேசிய மக்கள் கட்சி ( NPP ) 234 தொகுதிகளிலும் முழு ஆதரவு. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை நேரில் சந்தித்து ஆதரவு கடிதத்தை வழங்கிய தேசிய மற்றும் மாநில நிர்வாகிகள்.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான NDA கூட்டணிக்கு தேசிய மக்கள் கட்சி ( NPP ) 234 தொகுதிகளிலும் முழு ஆதரவு. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை  நேரில் சந்தித்து ஆதரவு கடிதத்தை வழங்கிய தேசிய மற்றும் மாநில நிர்வாகிகள். 

2026 சட்டமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டு தேர்தலுக்கான பணிகளை முழு வீச்சில் செய்து வருகிறது இந்திய மற்றும் தமிழக தலைமை தேர்தல் ஆணையம். இந்த நிலையில், வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தேசிய மக்கள் கட்சி முழு ஆதரவை தெரிவித்திருந்தது.  அதன் பேரில் தேசிய மக்கள் கட்சியின் ( NPP ) நிறுவனரும் தலைவருமான சங்மா அறிவுறுத்தலின் அடிப்படையில், 
மாநிலத் தலைவர் கோ. சீனிவாசன் தேசிய செயலாளர் அசோக்சாமி, மாநில செயலாளர் ராம்ஜி மற்றும் சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் தர்மன் உள்ளிட்ட மாநில மற்றும் அனைத்து மாவட்ட தலைவர்கள் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் கலந்து கொண்டு, சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி அவர்களை நேரில் சந்தித்து தேசிய மக்கள் கட்சியின் ( NPP ) முழு ஆதரவு கடிதத்தினை வழங்கினர். 
தேசிய மக்கள் கட்சியின் ( NPP ) தேசிய, மாநில மற்றும் மாவட்ட  நிர்வாகிகளை வரவேற்ற எடப்பாடி பழனிச்சாமி தனது  நன்றியை தெரிவித்துக் கொண்டார். அப்போது தேசிய மக்கள் கட்சியின் மாநில தலைவர் கோ ஸ்ரீனிவாசன் செய்தியாளரிடம் கூறுகையில் இந்திய திருநாட்டின் 6 தேசிய கட்சிகளில் ஒன்றான தேசிய மக்கள் கட்சி நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 234 தொகுதிகளிலும் தங்களது முழு ஆதரவினை தெரிவித்து அதற்கான கடிதத்தை எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், மீண்டும் தமிழக முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி அமர வைப்பதற்கு தங்களது கட்சியின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் முழுமூச்சுடன் செயல்படுவார்கள் என்றும் உறுதியளித்தார். இந்த நிகழ்வின்போது, கரூரை சேர்ந்த மாநில பொதுச் செயலாளர் ராஜ்மோகன், தர்மபுரி மாவட்ட தலைவர் சரண்யா ராணி, ஈரோடு மாவட்ட தலைவர் தங்கவேலு மற்றும் நீலகிரி மாவட்ட தலைவர் ராஜேஷ் உட்பட கன்னியாகுமரி கோவை கிருஷ்ணகிரி திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.


শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: