சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
2026 2029 ஆம் ஆண்டிற்கான சோழ வேளாளர் சமூக டிரஸ்ட் நிர்வாகிகளுக்கான தேர்தல். சேலத்தில் தலைவர் பதவிக்கு ஐந்து பேரும், 15 செயற்குழு உறுப்பினர் பொறுப்புக்கு 34 பேரும் போட்டி.
சேலம் கிச்சிபாளையம் சோழ வேளாளர் சமூக டிரஸ்ட் நிர்வாகிகளுக்கான தேர்தல் 3 வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் பதவி காலம் முடிந்ததை எடுத்து இன்று சேலம் நாராயண நகர் பகுதியில் உள்ள சோழ வேளாளர் சமுதாய திருமண மண்டபத்தில் நடைபெற்றது. தேர்தல் ஆணையராக ஓய்வு பெற்ற துணை வட்டாட்சியர் ரா. சுப்பிரமணி, உதவி தேர்தல் நடத்தும் ஆணையர்களாக கோபால் மற்றும் ராஜா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற 2026 மற்றும் 29 ஆம் ஆண்டிற்கான தேர்தலில் ஒரு தலைவர் பதவிக்கு ஐந்து பேரும், 15 செயற்குழு உறுப்பினர்கள் கொண்ட பொறுப்பிற்கு 34 பேரும் போட்டியிட்டனர். இந்திய தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் தேர்தலைப் போன்று மிகவும் கண்ணியமாக பலத்த காவல்துறை பாதுகாப்புடன் இந்த தேர்தல் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று காலை 9 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவானது மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. சமுதாய டிரஸ்டுக்காக நடத்தப்படும் இந்த தேர்தலில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாக்குகளை தங்களுக்கு விருப்பமானவர்களுக்கு பதிவு செய்தனர். இந்திய தேர்தல் ஆணையத்தால் கடைபிடிக்கப்படும் அத்துணை ஆவணங்களும் ஒரு சமுதாய தேர்தலில் கடைபிடிக்கப்பட்டது என்பது கூடுதல் தகவல். வாக்கு பதிவு இன்று மாலை நிறைவடைந்த உடன் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டு, பின்னர் நாளை வாக்குகள் எண்ணிக்கை மேற்கொள்ளப்பட்டு வெற்றி பெற்றவர்கள் அறிவிக்கப்படுவார்கள். இதனை அடுத்து நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் துணைத் தலைவர்கள், செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் மற்றும் வாக்காளர்கள் முன்னிலையில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர் என்று தேர்தல் நடத்தும் அலுவலரான ஓய்வு பெற்ற துணை ஆட்சியர் கா சுப்பிரமணி தெரிவித்தார்.
இதே போல ஒரு தலைவர் பதவிக்கு ஐந்து பேர் போட்டியிடும் சூழலில் ஜெயப்பிரகாஷ் என்பவரும் தலைவர் பதவிக்கு போட்டியிடுகின்றார் அவர் நம்மிடையே கூறுகையில், தன் வெற்றி பெற்றால் சோழர் மேலாளர் சமூக மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் பூர்த்தி செய்து தருவதோடு அவர்களை அடுத்த கட்ட நகர்விற்கு கொண்டு செல்ல முனைப்புடன் செயல்படுவேன் என்றும் சோழ வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகள் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் அதிகப்படியான மதிப்பெண்கள் பெரும் மாணவ மாணவிகளின் நலன் கருதி உயர்கல்விக்கு தேவையான அனைத்து கல்விக்கு தேவையான பயிற்சி வகுப்புகளும் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்த தேர்தலின் காரணமாக சேலம் கிச்சிபாளையம் நாராயண நகர் பகுதியில் மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டது.



0 coment rios: