சேலம்.
S.K. சுரேஷ் பாபு.
சேலம் மாநகராட்சி குடிநீர் விநியோகத்தை தனியார் மயமாக்கும் திட்டத்தை சேலம் மாநகராட்சி நிர்வாகம் கைவிட வேண்டும். மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பையும் செயல்படுத்தும் பட்சத்தில் சேலம் மாநகராட்சி நிர்வாகம் மிகக் கடுமையான விளைவுகளை சந்திக்கும். அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் மாநிலத் தலைவர் ஜங்ஷன் அண்ணாதுரை ஆவேசம்.
60 கோட்டங்களை உள்ளடக்கிய சேலம் மாநகராட்சிக்கு சேலம் மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் மேட்டூர் அணையில் பல்வேறு பகுதிகளில் நீர் உந்த நிலையங்கள் அமைக்கப்பட்டு அதன் மூலம் உந்தப்படும் நீரை சுத்திகரிப்பு செய்யப்பட்டு சேலம் மாநகரில் நான்கு மண்டலங்களில் உள்ள முக்கிய ராட்சத மேல்நிலை பெரிய அளவிலான நீர் தொட்டிகளில் நீரை நிரப்பி. 60 கோட்ட மக்களுக்கும் குடிநீர் வினியோகம் என்பது வாரத்திற்கு வாரத்திற்கு ஒரு முறை அல்லது 10 நாட்களுக்கு ஒரு முறை விநியோகிக்கப்பட்டு வருவது வழக்கம். இந்த நிலையில், கையால் ஆகாத சேலம் மாநகராட்சி நிர்வாகம் குடிநீர் விநியோகத்தை தனியார் மையமாக கடந்த மாமன்ற இயல்புக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியது. இதற்கு சேலம் மாநகரம் உட்பட மாவட்ட முழுவதும் உள்ள அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களாலும் கடுமையான கண்டனம் எழுந்தது. கடும் எதிர்ப்பையும் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளாமல், திமுக கூட்டணி மாமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் மாநகர மேயர் ராமச்சந்திரன் தீர்மானம் நிறைவேற்றிய போது, அதிமுக உறுப்பினர்கள் மட்டுமே கடும் அமலியில் ஈடுபட்டு, இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாமன்ற கூட்டத்தை புறக்கணித்தார்களே தவிர, திமுகவைச் சேர்ந்த மேயர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த தீர்மான நிறைவேற்றும் நிகழ்ச்சியில் திமுக கூட்டணி கட்சிகளான துணை மேயர் சாரதாதேவி மாணிக்கம் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாமன்ற உறுப்பினர் இமயவர்மன் இதுபோக ஒரு முஸ்லிம் கட்சியை சேர்ந்த இஸ்லாமியரும் அங்கு அங்கே ஏதோ அமர்ந்திருந்தார்கள். எவர் ஒருவரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை காரணம் தெரியவில்லை. இந்த நிலையில் அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் மாநில தலைவர் ஜங்ஷன் அண்ணாதுரை முக்கிய நிர்வாகிகளுடன் சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிருந்தா தேவி அவர்களை சந்தித்து சேலம் மாநகராட்சியில் நிலவி வரும் அவல நிலை குறித்தும், அராஜகம் குறித்தும்,
ஊழல் குறித்தும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்து கோரிக்கை மனு வழங்குவதற்காக வந்திருந்தார்.
அப்பொழுது அவர் கூறுகையில் குடிநீர் விநியோகம் என்பது இயற்கை வழங்கிய ஒரு உன்னத தேவை. அதனை வியாபாரம் ஆக்கும் நோக்கில் திமுகவை சேர்ந்த மேயர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் இதனை தனியார் மையம் ஆக்கி கொள்ளை அடித்துக் கோடி லாபம் சம்பாதிக்க இந்த திட்டத்தை தீர்மானமாக நிறைவேற்றி உள்ளார்கள் என்றும் இதனை சேலம் மாநகராட்சி மேயர் உடனடியாக ரத்து செய்யவில்லை எனில் மாநகரம் முழுவதும் உள்ள மக்களை ஒன்று திரட்டி கடுமையான போராட்டத்தை மாவட்ட நிர்வாகமும் மாநகராட்சி நிர்வாகமும் தம்பிக்கும் வகையிலும், வைத்து தங்களின் அமைப்பு வைத்து விடும் என்று ஆவேசத்துடன் பேட்டி அளித்தார் ஜங்ஷன் அண்ணாதுரை.
உடன் அமைப்பின் நிர்வாகிகள் அண்ணாதுரை முருகன் சார்லஸ் கார்த்தி தினேஷ் உட்பட ஊர் மக்கள் பலரும் உடன் இருந்தனர்.



0 coment rios: