சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
இந்திய மக்களுக்கும் வணிகப் பயன்பாட்டிற்கும் தேவையான எரிவாயு உருளைகள் தங்கு தடை இன்றி கிடைக்க மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். சேலத்தில் பிரபல இனிப்பு உணவு நிறுவனமான குப்தா ஸ்வீட்ஸ் நிறுவனம் வேண்டுகோள்.
வளைகுடா நாடுகளில் கச்சா எண்ணெய்க்கு ஏற்படும் மாற்றத்திற்கு ஏற்ப, உள்நாடுகளில் பெட்ரோல் டீசல் மற்றும் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளில் மாற்றம் இருக்கும். ஆனால் தற்பொழுது ஈரான் ஈராக் போர் மூண்டு, ஈரானில் வர்த்தக வணிக நிறுவனங்கள் குடியிருப்புகள் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது ஆயிரக்கணக்கான உயிர் பலிகளும் ஏற்பட்டுள்ளன. உலக நாடுகளின் உயிர் துடிப்பாக இருக்கும் கச்சா எண்ணெய் தயாரிக்கும் இடங்களையும் அமெரிக்கா, ஈராக் உள்ளிட்ட நாடுகள் குண்டுகள் வீசி தாக்கி அளித்ததன் எதிரொலியாக, உலக நாடுகளுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் என்பது முற்றிலுமாக தடைபட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியா மிகப்பெரிய பெட்ரோலிய தயாரிப்புகளில் பின்னடைவை சந்தித்து வருகிறது. நிலைமை எப்படி இருக்கு, எரிவாயு சிலிண்டர் தயாரிப்பு நிறுவனங்கள் போர்ப்பதற்றத்தின் காரணமாக வர்த்தக உபயோகத்திற்காக பயன்படும் சிலிண்டர்களின் விநியோகம் நிறுத்தப்படுவதாக ஏற்கனவே அறிவித்து விட்டன. இது வர்த்தக சிலிண்டர்களை மட்டுமே நம்பி அன்றாடம் பயணித்து வரும் உணவகங்களின் நிலை தற்பொழுது கேள்விக்குறியாகிவிட்டது.
அந்த வகையில் சேலம் மாவட்ட உணவக உரிமையாளர்கள் சங்கத்தினர் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில் நிலைமை இதேபோன்று நீடித்தால் இன்னும் இரண்டு நாட்களில் சேலம் மாவட்டத்தில் சுமார் 3000 உணவகங்கள் மூடப்படும் அபாயம் ஏற்படும் என்று கூறியிருந்தனர். இந்த நிலையில் சேலத்தில் பிரபல இனிப்பு மற்றும் உணவக நிறுவனமான குப்தா ஸ்வீட்ஸ் நிர்வாகத்தை சந்தித்து இந்த பிரச்சனை குறித்து நிறுவனர் பிரமோத் ஜி மற்றும் நிர்வாக இயக்குனர் ரஞ்ஜத் ஆகியோரை அணுகிய போது, நிர்வாகத்தின் சார்பாக குப்தா ஸ்வீட்ஸ் நிறுவனங்களின் மேலாளர் முகமது ராஜா நம்முடைய கூறுகையில்,
எரிவாயு உருளை தட்டுப்பாடு என்பது தங்களது நிறுவனத்திற்கு தற்பொழுது என வில்லை என்றும், வளைகுடா நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தின் காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் எரிவாயு சிலிண்டர்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் வர்த்தக சிலிண்டர் விநியோகத்தை முற்றிலுமாக நிறுத்தியதை தொடர்ந்து பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருவதை தாங்கள் அறிந்து வருகிறோம் என்றும் எதிர்வரும் காலங்களில் தங்களது நிறுவனத்திற்கும் இது போன்ற ஒரு சூழல் ஏற்படும் பட்சத்தில் காலையில் பற்ற வைக்கும் அடுப்பு இரவு வரை அணைக்க முடியாமல் தயாரிக்கப்படும் பரோட்டா தோசை உள்ளிட்ட உணவு வகைகளை நிறுத்தி வைப்பதோடு மட்டுமல்லாமல் அதற்கு மாற்றாக ஒரு தடவை சமைத்து மாலை முழுவதும் விநியோகிக்கப்படக்கூடிய கலவை சாதங்கள் எனப்படும் தக்காளி தயிர் வெஜிடபிள் பிரியாணி உள்ளிட்ட அனைத்து கலவை சாதங்கள் மட்டுமே இனி தயாரிக்க திட்டமிட்டுள்ளதாகவும், டீ காபி விநியோகம் செய்ய முடியுமா என்பது கூட தற்பொழுது சந்தேகத்தை எழுப்பி உள்ளதாக கூறிய நிறுவன மேலாளர் முகமது ராஜா, எங்களது நிறுவனத்தின் மூல தயாரிப்பு இனிப்புகள் மட்டுமே என்பதால் இனிப்புகள் உற்பத்தியிலும் குறிப்பாக வட இந்திய இனிப்புகள் மட்டுமே விற்பனை செய்யப்படும் தங்களது நிறுவனத்தில் இனிப்பு உற்பத்தி என்பது முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் தங்களது நிறுவனம் செவ்வாய்பேட்டையை மையமாகக் கொண்டு சேலத்தில் பல்வேறு கிளைகளை விரிவுபடுத்தி உள்ளதாக கூறியவர் வர்த்தக வணிக நிறுவனங்கள் நிறைந்த செவ்வாய்பேட்டை பகுதி முழுக்க முழுக்க வெள்ளி மற்றும் அதனை சார்ந்த அனைத்து வகையான வணிக நிறுவனங்கள் நிறைந்த பகுதியாகவும், இங்கு வணிகத்திற்காக வரும் வெளியூர் நபர்கள் வெளிமாநிலன் அவர்கள் இங்கேயே தங்கி தங்களது பணி முடியும் வரை பெரும்பாலும் தங்களது குப்தா ஸ்வீட்ஸ் நிறுவனத்திற்காக மட்டுமே உணவு உட்கொள்ள ஒருவர் என்று குறிப்பிட்ட அவர் இனிவரும் காலங்களில் நிலைமை சீரழையாமல் இருந்தால் எப்படி வாடிக்கையாளர்களை மகிழ்விப்பது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது என்று கூறினார். மேலும் இந்த பிரச்சனைக்கு மத்திய மாநில அரசுகளை குற்றம் சாட்டவே இயலாது என்றும் மாறாக வளைகுடா நாடுகளில் நடைபெறும் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டுவதற்குள் நிலைமை சீரடைந்து ஒவ்வொரு நாடுகளுக்கும் கச்சா எண்ணெய் விநியோகம் முழுமையாக சென்று சேர்ந்தால் மட்டுமே இதுபோன்ற அசௌகர்யத்தில் இருந்து மீள முடியும் என்று குறிப்பிட்ட அவர் கொரோனா கால கட்டத்தில் கூட இப்படி ஒரு பாதிப்பை எவர் ஒருவரும் சந்தித்து இருக்க மாட்டார்கள் ஆனால் தற்பொழுது ஏற்பட்டுள்ள ஈரான் ஈராக் போர் சம்பந்தமாக தமிழகம் ஏன் இந்தியா உட்பட பல்வேறு உலக நாடுகள் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்து வருவதாக வேதனை தெரிவித்ததோடு நிலைமை விரைவில் சீரடையும் என்ற நம்பிக்கையையும் தெரிவித்தார்.
நிலைமை சீரடையும் வரை தங்களது இனிப்பது மற்றும் உணவு நிறுவனத்தின் ஆதரவாளர்கள் இந்த அசௌகரியத்தை பொறுத்து தொடர்ந்து நல்ல ஆதரவு வழங்க வேண்டும் என்றும் குப்தா ஸ்வீட்ஸ் நிறுவன மேலாளர் முகமது ராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.



0 coment rios: