சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலத்தில் வெகு விமர்சையாக நடைபெற்ற முருகப்பெருமானின் வேல் பூஜை மற்றும் மஹேஸ்வர பூஜை.
சேலம் பெரமனூர் கதிரேசன் செட்டியார் குடும்பத்தாரின் சார்பில் 14 ஆம் ஆண்டு எம்பெருமான் முருக கடவுளின் வேல் பூஜை மற்றும் மஹோஸ்வர பூஜை ஆகியவை வெகு விமர்சையாக நடைபெற்றது. கதிரேசன் செட்டியார் குடும்பத்தார், சேலம் எஸ்.ஜே கண்ணன் குடும்பத்தார், ஸ்டேஷனரி சாத்தப்பன் குடும்பத்தார் மற்றும் காமராஜர் காலனி புகழ் என்கின்ற பழனியப்பன் குடும்பத்தார் உள்ளிட்டோர் முன் நின்று நடத்திய இந்த சிறப்பு பூஜை ஏற்காடு அடிவார பகுதியில் உள்ள செட்டிநாடு மகாலில் நடைபெற்றது.
அந்த பகுதி இந்திரா நகர் ஸ்ரீ வலம்புரி செல்வ விநாயகர் திருக்கோவிலில் இருந்து பக்தர்கள் காவடி மற்றும் பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி அந்த பகுதிகளின் முக்கிய வீதிகளின் வழியாக நடைபெற்று மண்டபத்தை அடைந்தது. தொடர்ந்து தொடர்ந்து முருகப்பெருமானின் சக்திவேலிற்கு சக்தி பூஜையும் சிவபெருமானுக்கு மகேஸ்வர பூஜையும் தொடங்கியது. முருகனடிமை ஸ்ரீலஸ்ரீ சிவஸ்ரீ திருஞானசம்பந்தம் சிவாச்சியார் சுவாமிகள் தலைமையில், சேலம் அருள்மிகு சுகவனேஸ்வரர் திருக்கோவில் மற்றும் ஸ்ரீ முத்துமலை முருகன் திருக்கோவில் ஈசானி சிவாச்சாரியார் கலந்துகொண்டு சுவாமிகளின் விக்கிரகங்களுக்கு பால் இளநீர் சந்தனம் மஞ்சள் திருமஞ்சனம் உள்ளிட்ட பல்வேறு மங்களப் பொருட்களால் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. திருக்கயிலாய வாக்கியங்கள் முழங்க பக்தர்களின் சரண கோஷங்களுக்கு இடையே மகா தேவாரதனை நடைபெற்றன. இதனை அடுத்து சக்திவேல் இருக்கும் சிவபெருமானுக்கும் சிறப்பு அலங்காரங்கள் மேற்கொள்ளப்பட்டு பல்வேறு சிறப்பு சேவைகளும் நடைபெற்றன.
விழாவில் கலந்து கொண்டாள் தொழில் விருத்தி வியாபார விருத்தி குடும்ப விருத்தி திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் ஆகும் குழந்தை பேர் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும் என்ற ஐதீகத்தின் காரணமாக சேலம் மாநகரில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு இந்த விழாவினை சிறப்பித்தனர். மேலும் இந்த சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கிய பிறகு மாலை பானக பூஜையுடன் 14 ஆம் ஆண்டு வேல் பூஜை மற்றும் மகேஸ்வர பூஜை நிறைவு பெற்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மிகவும் சிறப்பாக செய்திருந்தனர்.



0 coment rios: