சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் பொங்கல் தொகுப்புடன் புது பானை மற்றும் அடுப்பு வழங்கிட வேண்டும். தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் அமைப்புசாரா தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்.
மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காக்கு பகுதியில் பொங்கல் தொகுப்புடன் புதுப்பானை மற்றும் அடுப்பு வழங்கிட வேண்டும் என தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் சேலத்தில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அனைத்து மண்பாண்ட தொழிலாளர்களுக்கும் மழைக்கால நிவாரணம் வழங்கிட வேண்டும் மழைக்கால நிவாரணம் ரூபாய் 5 ஆயிரத்தில் இருந்து பத்தாயிரம் ஆக உயர்த்தி வழங்க வேண்டும்.ஏரி மற்றும் குளங்களிலிருந்து எவ்வித நிபந்தனையும் இன்றி களிமண் எடுத்து தொழில் செய்வதற்கு அரசு ஆவணம் செய்ய வேண்டும். அனைத்து மண்பாண்ட தொழிலாளர்களுக்கும் மின்சக்கரம் வழங்கி இலவச மின்சாரம் வழங்க வேண்டும் குடியிருக்கும் வீட்டிற்கு குடிமனை பட்டா வழங்கிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு வாக்களிப்பது எனவும் மன்றத்தில் தங்களின் கோரிக்கைகளுக்காக குரல் எழுப்ப பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். தொடர்ந்து சேலம் மாவட்ட புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது .



0 coment rios: