ஞாயிறு, 1 மார்ச், 2026

சேலத்தில் JCI மண்டல மீடியா அமைப்பின் சார்பில் பொதுமக்களை நல்வழிப்படுத்தும் விதமாக விழிப்புணர்வு பதாகை திறப்பு விழா. சேலம் ஜங்ஷன் பிரதான சாலையில் நடைபெற்ற விழாவில் அமைப்பின் தேசிய துணை தலைவர் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

சேலத்தில் JCI மண்டல மீடியா  அமைப்பின் சார்பில் பொதுமக்களை நல்வழிப்படுத்தும் விதமாக விழிப்புணர்வு பதாகை திறப்பு விழா. சேலம் ஜங்ஷன் பிரதான சாலையில் நடைபெற்ற விழாவில் அமைப்பின் தேசிய துணை தலைவர் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

பன்னாட்டு ஜூனியர் சேம்பர் (Junior Chamber International - JCI) என்பது 18 முதல் 40 வயதுக்குட்பட்ட இளைஞர்களின் தலைமைத்துவத் திறன்சமூகப் பொறுப்புணர்வு மற்றும் தொழில்முனைவோரை மேம்படுத்தும் ஒரு இலாப நோக்கற்ற சர்வதேச தன்னார்வத் தொண்டு அமைப்பாகும். 1944-ல் தொடங்கப்பட்ட இவ்வமைப்பு, 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் உறுப்பினர்களைக் கொண்டுநேர்மறையான சமூக மாற்றத்தை உருவாக்க செயல்படுகிறது. அந்த வகையில் சேலம் JCI அமைப்பின் சேலம் மண்டல தலைவர் மணிவண்ணன் தலைமையில் நடைபெற்றது இந்த விழிப்புணர்வு பதாகை திறக்கும் விழா சேலம் ஜங்ஷன் பிரதான சாலையில் உள்ள சூரமங்கலம் காவல் நிலையம் அருகே நடைபெற்றது. அமைப்பின் மண்டல மீடியா ஒருங்கிணைப்பாளர் கிரித்திகா முன்னிலை வகித்த இந்த நிகழ்வில் அமைப்பின் தேசிய துணை தலைவர் ஜித்தேஷ் அத்வானி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகன ஓட்டிகள் பயணிக்க வேண்டும் மது அருந்திவிட்டு வாகனத்தை இயக்கக் கூடாது என் மனம் உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பலகையை திறந்து வைத்தார். இது குறித்து பன்னாட்டு ஜூனியர் சேம்பர் அமைப்பின் தேசிய துணை தலைவர் ஜித்தேஷ் அத்வானி மற்றும் சேலம் மண்டல தலைவர் மணிவண்ணன் ஆகியோர்  செய்தியாளர்களிடம் கூறுகையில், 
எந்த நோக்கத்திற்காக இந்த அமைப்பு தொடங்கப்பட்டதோ அந்த நோக்கத்தை நோக்கி இந்த அமைப்பு தொடர்ச்சியாக பயணித்துக் கொண்டிருப்பதாகவும் இளைய சமுதாயத்தினரை மட்டுமே கொண்டு அவர்களை ஊக்குவிக்கும் மொபைல் பல்வேறு நிகழ்வுகளை நடத்தி அவர்களுக்கான தேவைகள் அனைத்தும் பயிற்சிகளின் வாயிலாக பூர்த்தி செய்து கொடுத்து அவர்களை நல்வழிப்படுத்தும் விதமாக ஒவ்வொரு இளைய சமுதாயத்தினரையும் ஆண் பெண் உட்பட அனைத்து தரப்பினரையும் இது இந்தியாவில் மிகச் சிறந்த இடத்தில் அமர வைத்துள்ளது தங்களது அமைப்புக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்று பெருமிதம் தெரிவித்தார். இது போக அமைப்பின் எதிர்கால லட்சியம் நோக்கம் என்று பல்வேறு வகையில் இருந்தாலுமே கூட எதிர்கால இந்திய தூண்களை நிர்ணயிக்கும் விதமாக படித்த இளம் வயதினருக்கு தேவையான அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து அவர்களை நல்வழிப்படுத்துவது மட்டுமே தங்களது இலக்கு என்றும் அதற்கான காலகட்ட நிர்ணயம் தங்கள் நிர்ணயிக்கவில்லை என்று குறிப்பிட்ட அவர், எதிர்காலத்தில் 100க்கு 1000 சதவீதம் இந்த இலக்கை நாங்கள் எட்டி இந்தியாவில் படித்த இளைஞர்களை நல்வழிப்படுத்துவோம் என்ற நம்பிக்கை உள்ளது என்றும் உறுதிப்பட தெரிவித்தார்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: