ஞாயிறு, 1 மார்ச், 2026

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 78வது பிறந்தநாளையொட்டி ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதியில அதிமுக சார்பில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் – ஏராளமான பொதுமக்கள் பயனடைந்தனர்..!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 78வது பிறந்தநாளை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதியில மாபெரும் இலவச மருத்துவ முகாம் – ஏராளமான பொதுமக்கள் பயனடைந்தனர்

முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் 78வது பிறந்த நாளை முன்னிட்டு,
அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான
எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க,
ஈரோடு மாநகர் மாவட்டம் மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதி, அனைத்துலக எம்ஜிஆர் மன்றம், KIMS மருத்துவமனை இணைந்து,
ஈரோடு மாவட்டம் முள்ளாம்பரப்பு ஆர்.பி.டி திருமண மண்டபத்தில் மாபெரும் இலவச பொது மருத்துவ சிகிச்சை முகாம் சிறப்பாக நடைபெற்றது.

அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வி.பி. சிவசுப்பிரமணி தலைமையில் நடைபெற்ற இந்த மருத்துவ முகாமை, முன்னாள் அமைச்சரும் கழக அமைப்புச் செயலாளருமான தங்கமணி மற்றும் ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.வி. ராமலிங்கம் ஆகியோர் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தனர்.


இந்த நிகழ்ச்சியில் மொடக்குறிச்சி மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் மயில் என்கிற சுப்பிரமணி, மொடக்குறிச்சி வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் சாலை மாணிக்கம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ். தென்னரசு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வகுமார் சின்னையன், முன்னாள் அமைச்சர் பி.சி. ராமசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு முகாமை சிறப்பித்தனர். 


மேலும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய மற்றும் பேரூர் கழக செயலாளர்கள், மாநில மற்றும் மாவட்ட சார்பு அமைப்புகளின் நிர்வாகிகள், கிளை கழக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


இந்த மருத்துவ முகாமில் கிம்ஸ் மருத்துவமனையை சேர்ந்த  மருத்துவ நிபுணர்கள் பல்துறை மருத்துவ சேவைகளை வழங்கினர். 

குறிப்பாக இருதய நோய் சிகிச்சை, மூளை நரம்பியல் சிகிச்சை, எலும்பியல் சிகிச்சை, சிறுநீரக சிகிச்சை, பெண்களுக்கான மகப்பேறு மருத்துவம், பொது மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, 


பொதுமக்களுக்கு தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
மேலும் முகாமில் பங்கேற்ற பொதுமக்களுக்கு உயர்தர மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டன. 

இந்த இலவச மருத்துவ முகாமில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு பயனடைந்தனர்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு நடத்தப்பட்ட இந்த மருத்துவ முகாம், பொதுமக்களுக்கு பெரும் பயன் அளித்ததாகவும், பொதுமக்கள் மற்றும் கழக நிர்வாகிகள் பாராட்டினர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: