புதன், 4 மார்ச், 2026

நாட்டின் முதுகெலும்பாக திகழும் விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளையும் ஏற்கும் கட்சிகள் மட்டுமே தமிழகத்தில் ஆட்சி பொறுப்பில் அமைய முடியும். தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி அரசியல் கட்சியினருக்கு அறிவுறுத்தல்.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

நாட்டின் முதுகெலும்பாக திகழும்  விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளையும் ஏற்கும் கட்சிகள் மட்டுமே தமிழகத்தில் ஆட்சி பொறுப்பில் அமைய முடியும். தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி அரசியல் கட்சியினருக்கு அறிவுறுத்தல்.

தமிழக விவசாயிகளின் நலன் கருதியும் அவர்களின் முன்னேற்றத்திற்காகவும் அழிந்து வரும் விவசாய தொழிலை பாதுகாக்கவும் தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் தமிழக அரசுக்கு பல்வேறு கோரிக்கைகள் முன்வைத்தும் தற்பொழுது வரை நிறைவேற்றப்படவில்லை என்பது மாநிலத் தலைவர் வேலுச்சாமியின் ஒட்டுமொத்த குற்றச்சாட்டாகவே தற்போது வரை உள்ளது. இந்த நிலையில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் திருவண்ணாமலையில் தனது 27ஆம் தேதி நடைபெற்ற மகாசபை கூட்டத்திலும் கூட பல்வேறு முக்கிய தீர்மானங்கள் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிறுத்தி அரசியல் கட்சிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. இந்த நிலையில், எதிர்வரும் தமிழக சட்டமன்றத் தேர்தல் சம்பந்தமாக தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சியினருக்கும் அறிக்கையின் வாயிலாக உழவர் பெருந்தலைவர்  நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி அறிகையின் வாயிலாக கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளார். 
அதன் அடிப்படையில், தமிழகத்தில் 2026ல் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் தமிழக அரசியல் கட்சிகள் வெற்றி பெற்று, ஆட்சி பொறுப்பில் அமர வேண்டும் என்றால் நாட்டின் முதுகெலும்பாக திகழும் தமிழக விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளையும் ஏற்க வேண்டும். விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளையும் ஏற்கும் அரசியல் கட்சி மட்டுமே ஆட்சி பொறுப்பில் அமர முடியும் என உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் தமிழக அரசியல் கட்சி தலைவர்களுக்கு இந்த அறிக்கையின் வாயிலாக நினைவுபடுத்துகிறது என்று உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுசாமி அறிக்கையின் வாயிலாக வலியுறுத்தி உள்ளார்.




শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: