சேலம்.
S.K. சுரேஷ் பாபு.
சேலம் சோனா வள்ளியப்பா பப்ளிக் பள்ளியின் ஆண்டு விளையாட்டு விழா. பல்வேறு போட்டுகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு மகிழ்ந்து கிரிக்கெட்டர் சாய் கிஷோர்.
சோனா வள்ளியப்பா பப்ளிக் பள்ளியின் ஆண்டு விளையாட்டு விழாவானது, சோனா கல்லூரி விளையாட்டு மைதானத்தில் மிக உற்சாகத்துடன் நடைபெற்றது. சோனா கல்வி நிறுவனத்தின் தலைவர் வள்ளியப்பா தலைமையில் நடைப்பெற்ற இந்த நிகழ்வில் துணைத்தலைவர்கள் சொக்கு வள்ளியப்பா, தியாகு வள்ளியப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கிரிக்கெட்டர் சாய் கிஷோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி வைத்து விழாவை தொடங்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து மாணவர்களின் விளையாட்டுத் திறனை வெளிப்படுத்தும் விதமாக அமைந்த இந்த விழாவில் வீரர்களின் அணிவகுப்பு மற்றும் தடகளப் போட்டிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.
விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினர் கிரிக்கெட்டர் சாய் கிஷோர் பரிசுக் கோப்பைகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி, கல்வியோடு விளையாட்டும் இணையும் போது தான் ஒரு மாணவனின் தன்னம்பிக்கையும் ,போட்டி மனப்பான்மையும் வளர்கிறது என்று கூறி அவர் மாணவர்களை வெகுவாக பாராட்டினார். இந்த விளையாட்டு விழாவில் சோனா வள்ளியப்பா பப்ளிக் பள்ளியின் தாளாளர் திருமதி .சீதா வள்ளியப்பா, திருமதி விசாலாட்சி சொக்கு, இயக்குநர் கார்த்திகேயன், பள்ளியின் முதல்வர் திருமதி.இ.ஜெ.கவிதா, ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என திரளாக கலந்து கொண்டனர்.



0 coment rios: