சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
ஈகை திருநாளான புனித ரமலான் மாதத்தில் வரும் கண்ணியமிக்க இரவு. திருக்குர்ஆன் அருளப்பட்ட இந்த தினத்தில் இஸ்லாமியர்களால் கடைபிடிக்கப்படும் இந்த புனித இரவுக்காக பள்ளி சிறார்களுக்கும் இயலாமையில் உள்ள கண்ணில் பட்டவர்களுக்கு எல்லாம் பொருள் உதவி செய்து மகிழ்ந்த சேலத்தின் மிகச்சிறந்த சமூக சேவகர்.
உலக இஸ்லாமியர்களால் ஈகைத் திருநாளாக கொண்டாடப்படும் புனித ரமலான் திருவிழாவின் போது இஸ்லாமிய பெருமக்களால் பெரிதும் போற்றப்படும் கண்ணியமிக்க இரவு எனப்படும் லைலத்துல் கத்ர் என்ற பொருளுக்கான விளக்கம் கேட்டு சேலம் கோட்டை பகுதியை சேர்ந்த மிகச்சிறந்த சமூக சேவகரான கோட்டை ஷபி என்பவரை நமது செய்தி குழு அனுப்பியது. அப்பொழுது அவர் கூறியதாவது, லைலத்துல் கத்ர் (கண்ணியமிக்க இரவு) என்பது ரமளான் மாதத்தின் கடைசிப் பத்தில், குறிப்பாக ஒற்றைப்படை இரவுகளில் (21, 23, 25, 27, 29) வரக்கூடிய மிகவும் புனிதமான இரவாகும். இந்த இரவில் குர்ஆன் அருளப்பட்டது. ஆயிரம் மாதங்களை (சுமார் 83 ஆண்டுகள்) விட சிறந்த இந்த இரவில் செய்யும் வழிபாடு, பாவமன்னிப்பு மற்றும் பிரார்த்தனைகளுக்கு அதீத நன்மைகள் கிடைக்கும் என்று கூறிய கோட்டை ஷபி, லைலத்துல் கத்ரின் சிறப்புகள் மற்றும் முக்கிய தகவல்கள்கலாக அதன் பொருள் குறித்து கூறத் தொடங்கிய அவர்,'லைல்' என்றால் இரவு, 'கத்ர்' என்றால் கண்ணியம், சிறப்பு அல்லது விதித்தல் என்று பொருள்படும் என்றும் தெரிவித்தார்.
ஏற்கனவே தன் நலன் பாராமல் பிறர் நலனுக்காக வலது கை கொடுப்பதை இடது கை அறியாது என்ற பழமொழிக்கு ஏற்ப எவருக்கும் தெரியாமல் தன்னால் முடிந்தவரை ஈகை செய்து வரும் இவர், இந்த திருநாளயொட்டி இன்று காலை முதலே சேலம் சமூக நலத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பெற்ற பள்ளி சிறார்கள் சிற்றுண்டி வழங்கி மகிழ்ந்த அவர், சேலம் கோட்டை உட்பட மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செவ்வாய்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இயலாமை நிலையில் உள்ள கண்ணியமிக்க இந்த திருநாளிற்காக, தனது கண்ணில் பட்ட இயலாதவர்கள் அனைவருக்கும் தன்னால் இயன்ற ஈகையையும் செய்து மகிழ்ந்தார்.
தொடர்ந்து திருக்குர்ஆன் அருளப்பட்ட இந்த தினத்தின் புனித தன்மையை குறித்து தொடர்ந்து அவர், இந்த இரவில் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவது, ஆயிரம் மாதங்கள் தொடர்ந்து வணக்க வழிபாடுகள் செய்வதை விட சிறந்தது இஸ்லாம்கல்வி.காம்.
குர்ஆன் அருளப்பட்ட இரவு என்றும் இந்த இரவில் தான் திருக்குர்ஆன் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு முதன்முதலில் அருளப்பட்டது.
பாவமன்னிப்பு நம்பிக்கையுடனும், நன்மையை எதிர்பார்த்தும் இந்த இரவில் தொழுகையில் நிலைத்திருப்பவர்களின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படும் இன்று தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், ரமளானின் கடைசி பத்து நாட்களின் ஒற்றைப்படை இரவுகளில் தேட வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.
அடையாளங்களாக இந்த இரவு அமைதியானதாக இருக்கும், அதிக வெப்பமோ குளிரோ இருக்காது. அடுத்த நாள் காலையில் சூரியன் கதிர்கள் இல்லாமல் மென்மையாக உதிக்கும். லைலத்துல் கத்ர் இரவில் அதிகம் ஓத வேண்டிய துஆ: "அல்லாஹும்ம இன்னக அஃபுவ்வுன் துஹிப்புல் அஃவ்வ ஃபஃபு அன்னி" (பொருள்: யா அல்லாஹ்! நீ மன்னிப்பவன், மன்னிப்பை விரும்புபவன், எனவே என்னை மன்னிப்பாயாக இந்த புனித தினத்தின் அடையாளங்களை நம்மிடையே பகிர்ந்து கொண்டார் சேலத்தில் சிறந்த சமூக சேவகர் ஆன கோட்டை ஷபி.



0 coment rios: